ஜோலார்பேட்டை: ேஜாலார்பேட்டை அருகே நேற்றிரவு காதலன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்த நிலையில் இன்று காலை நிறைமாத கர்ப்பிணி காதலியும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார். இதில் சிசுவும் பலியானது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பெரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் மகன் நித்தின்ராகுல்(20). இவர் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். அதே கல்லூரியில் ஜோலார்பேட்டை அடுத்த காவேரிப்பட்டு கிராமத்தை சேர்ந்த அனுமுத்து மகள் தரணி(20)என்பவரும் படித்து வந்தார். ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினர். இந்நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில் மாணவி தரணி, கர்ப்பிணியானார்.
தற்போது அவருக்கு ஒன்பதாவது மாதம் என்று கூறப்படுகிறது. கல்லூரி விடுமுறை காரணமாக இருவரும் அவரவர் வீடுகளுக்கு திரும்பினர். இந்நிலையில் நேற்றிரவு நித்தின்ராகுல், பெரியாங்குப்பம் பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து திடீரென தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து தகவலறிந்த ஜோலார்பேட்டை ரயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் காதலன் தற்கொலை செய்துகொண்டதை அறிந்த தரணி (20) கதறி அழுதார். வாணியம்பாடியில் வசிக்கும் தனது பாட்டி வீட்டுக்கு சென்றுவருவதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து வெளியேறினார். பாட்டி வீட்டுக்கு சென்ற அவர், இன்று அதிகாலை திடீரென அங்குள்ள ரயில்வே தண்டவாளம் வழியாக நடந்து சென்றார்.
அப்போது அவ்வழியாக வந்த ரயில் முன் தரணி பாய்ந்தார். இதில் தூக்கிவீசப்பட்ட அவர் அதே இடத்தில் பலியானார். மேலும் அவரது வயிற்றில் இருந்த 9 மாத சிசுவும் வெளியே விழுந்து இறந்தது. இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தரணி மற்றும் சிசுவின் சடலத்தை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து ரயில்வே போலீசார் வழக்குப்பதிந்து காதல்ஜோடியின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஒரே கல்லூரியில் படித்து வந்த காதலர்கள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரே மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இவர்களுக்குள் நட்பு ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலிக்க தொடங்கினர். இந்நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்த நிலையில் மாணவி தரணி, கர்ப்பிணியானார்.