கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், மகராஜகடை மாட்டோனி பகுதியைச் சேர்ந்தவர் மோகன்குமார் (25). இவரது மனைவி ஷர்மிளா (19). இவர்களுக்கு கடந்த 15 நாட்களுக்கு முன் தான், காதல் திருமணம் நடந்தது. கணவன், மனைவி இருவரும் மாட்டோனியில் தங்கியிருந்தனர். நேற்று முன்தினம், கிருஷ்ணகிரி காந்தி நகரில் உள்ள உறவினர் வீட்டு விருந்துக்காக மோகன்குமார், ஷர்மிளா ஆகியோர் சென்றிருந்தனர். அப்போது, அங்கு டூவீலர்களில் வந்த பெண்ணின் உறவினர்கள் திடீரென மோகன்குமாரை சரமாரியாக தாக்கி ஷர்மிளாவை அங்கிருந்து கடத்திச் சென்றதாக கூறப்படுகிறது. அங்கிருந்தவர்கள் அவர்களை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து மோகன்குமார், டவுன் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காதல் திருமணம் புதுப்பெண் கடத்தல்
37
previous post