சிவகங்கை: திருப்புவனம் அருகே 2 நாட்களுக்கு முன்பு காதலிக்க மறுத்த மாணவி மீது தாக்குதல் நடத்தி அவரின் வீடு, இரு சக்கர வாகனத்தை சேதப்படுத்திய வழக்கில் 11 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். மாணவியை காதலித்த தினேஷ் (20) அவரது நண்பர்கள் மணி பாரதி (19), செல்வமுருகன் (20), அப்துல் ரஹீம் (19), மோகன் (19), தேவா (19), சூர்யா (18), முகமது தவ்பீக் (19), செந்தூர் பாண்டியன் (20), மன்மோகன் (19) மற்றும் தேவா (20) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். மேலும் 10 பைக்குகளும் பறிமுதல் செய்யப்பட்டது.