Monday, April 22, 2024
Home » காதலுக்கு உதவும் சில கலக்கல் கேட்ஜெட்கள்!

காதலுக்கு உதவும் சில கலக்கல் கேட்ஜெட்கள்!

by Porselvi

பொதுவாகவே இந்த கேட்ஜெட்களை ஒருவரை ஒருவர் அதிகம் பார்த்துக்கொள்ளாமல் இருக்கும் LDR (Long Distance Relationaship)எனப்படும் தூரத்து உறவுகளையே அதிகம் டார்கெட் செய்கின்றன.

டச் லேம்ப்
(Long Distance Touch Lamps)

ஜோடியாக வரும் இந்த லைட்டுகள் மிதக்கும் விளக்குகளை ஞாபகப்படுத்தும் படி இருக்கும். ஒண்ணு உனக்கு இன்னொன்னு எனக்கு என வாங்கி ஆளுக்கொன்றாக உலகில் எந்த மூலையில் இருந்தாலும் அவரவர் இடத்தில் வைத்துக்கொள்ளலாம். ஒய்-பை கொண்டு இயங்கும் இந்த லைட்டுகளை இங்கே லேசாக தட்டினால் அங்கே இருக்கும் இன்னொரு ஜோடியில் கலர்ஃபுல்லாக லைட் எரியும். நம் ஜோடி நம்மை நினைத்துகொண்டிருக்கிறார் என ஒரு சின்ன ஃபிளாஷ் லைட் மூலம் தெரியப்படுத்தலாம்.

பாண்ட் டச் (Bond Touch)

ஸ்மார்ட் வாட்ச் போன்ற ரெண்டு மணிகட்டு பேண்ட்கள். ஒண்ணு உனக்கு இன்னொன்னு எனக்கு கான்செப்ட்தான் இதுவும். டச் லைட் ஒரு இடத்தில் வைத்துக்கொள்ளும்படியான கேட்ஜெட் எனில் பாண்ட் டச் கையிலேயே இருப்பதால் எப்போதெல்லாம் நினைக்கிறோமோ அப்போதெல்லாம் சின்னதாக ஒரு தட்டு தட்டி காதலி/காதலனுக்கு ‘ஐயம் தின்கிங் ஆஃப் யூ’ என கலர்களில் கோட் அனுப்பலாம். மேலும் இதனுடன் மொபைல் ஆப் ஒன்றும் வரும். அதில் தட்டப்பட்ட எண்ணிக்கைகள், கலர்கள், என மொபைல் மற்றும் பாண்ட் சார்ஜ் அளவுகள் என அனைத்தும் இருக்கும். மேலும் இந்தக் கலர்களைக் கொண்டு மெஸ்ஸேஜ்களாகக் கூட குறிப்பால் உணர்த்தலாம். அதாவது ‘ஐ லவ் யூ’ என்றால் பின்க், ஐ மிஸ் யூ என்றால் நீலம் எனவும் வைத்துக் கொள்ளலாமாம்.

ஹெச்.பி மோதிரம்
(HB Ring – Heart Beat Ring)

அயல்நாடுகளில் கல்யாணம் அல்லது நிச்சயதார்த்த மோதிரமாகவே இதைத்தான் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள். தங்கம், பிளாட்டினம், ரோஸ் கோல்ட், நகை போலவே வரும் இந்த மோதிரங்கள் சார்ஜ் போட்டுக்கொள்ளும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. எப்போதும் உங்கள் அன்பானவரின் இதயத் துடிப்பை நம் விரல்களில் உணர வைத்துக் கொண்டே இருக்குமாம் இந்த ஹெச்.பி மோதிரங்கள். இது ஒர்கவுட் செய்யும் போது உங்களின் ஹார்ட் ரேட்டையும் காண்பிக்கும் என்பது கூடுதல் தகவல்.

ஐவாட்ச் ஹார்ட் பீட் (I watch)

உடற்பயிற்சி, ரன்னிங், வாக்கிங், நீச்சல் என கணக்கிட்டு காட்டுவதும் மேலும் வாட்ச் மூலமே கால் செய்து பேசும் வசதி, மெஸ்ஸேஜ்களுக்கு ரிப்ளை அனுப்பும் வசதி என அனைத்தையும் கொண்டு வந்துவிட்ட ஐவாட்ச்கள். அதில் சமீபத்தில் வெளியான ஆப்பிள் ஐவாட்ச் சீரீஸ்களில் உங்கள் பார்ட்னரிடமும் ஐவாட்ச் இருப்பின் அதன் மூலம் நான் உன்னை நினைத்துக்கொண்டிருக்கிறேன் எனத் தெரிவிக்கும் விதமாக ஹார்ட் பீட் சிம்பல் அனுப்பலாம்.

தலையணை பேச்சு (Pillow Talk)

ஒரு பேண்ட் மற்றும் தலையணைக்கு அடியில் வைத்துக்கொள்ளும் படியான ஒரு பாக்ஸ். ஒய்-பை கொண்டு இயங்கும் இந்த கருவியும் ஜோடியாக வரும். பேண்டை கையில் மாட்டிக் கொண்டு தலையணைக்கு அடியில் பாக்ஸை வைத்துவிட்டால் உங்கள் ஹார்ட் பீட் உங்கள் அன்பானவருக்குக் கேட்கும். எனில் தூங்கும் போது உங்களுக்கு நெருக்கமானவரின் ஹார்ட் பீட் கேட்டுக் கொண்டே தூங்கும் கான்செப்ட் இது.

கிஸ்ஸெஞ்சர் (Kissenger)

அதாவது ஒரு மண்டை வடிவில் இருக்கும் கருவி. ஸ்கைப், ஸூம் போன்ற வீடியோ கால்களில் இணைத்துக்கொள்ளும் வெப் கேமரா போல் இது வெப் கிஸ்ஸர். ரோபோ மண்டை போல் இருக்கும் இந்த கிஸ்ஸெஞ்சரும் ஜோடியாக வரும் கருவிதான். உங்கள் அன்புக்குரியவருக்கு முத்தமிட நினைத்தால் அந்த ரோபோ மண்டையில் இருக்கும் இதழ்களில் முத்தமிட்டால் என்ன அழுத்தத்தில், என்ன உணர்வுடன் முத்தம் கொடுத்தோமோ அதே அழுத்தத்துடன் கிஸ்ஸெஞ்சர் உங்கள் அன்பு முத்தத்தை மறுபக்கம் பகிர்ந்துவிடும். மேலும் இவை மொபைல்களுக்கு தனியாக , கணினிக்கு தனியாக என விதவிதமாக உள்ளன.

– ஷாலினி நியூட்டன்

You may also like

Leave a Comment

eight − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi