Tuesday, December 12, 2023
Home » தாமரை கட்சியின் கூட்டத்தில் இருந்து நடிகை திடீரென எஸ்கேப் ஆன கதையை சொல்கிறார்: wiki யானந்தா

தாமரை கட்சியின் கூட்டத்தில் இருந்து நடிகை திடீரென எஸ்கேப் ஆன கதையை சொல்கிறார்: wiki யானந்தா

by Dhanush Kumar

‘‘நெல்லை, தஞ்சை இலை கட்சி நிர்வாகிகளை நம்பி கட்சியின் அடையாளத்தை இழந்துவிடாதீங்க என்று யார் யாருக்கு அட்வைஸ் பண்ணாங்க..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கான பிரச்னை வந்தபோது தேனி மாவட்டத்தில் தர்மயுத்த நாயகரின் கை ஓங்கி இருந்தது. நாளடைவில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாக தேனி மாவட்ட இலைக்கட்சி நிர்வாகிகளில் பெரும்பாலானோர் சேலம்காரர் பக்கம் போயிட்டாங்க. இதனால் தேனி தர்மயுத்த நாயகர் கலங்கி போய் இருக்கிறாராம். இந்நிலையில் நீதிமன்ற தீர்ப்பு, தேர்தல் கமிஷன் தீர்ப்பு என அனைத்தும் சேலம் தரப்புக்கு சாதகமாகியதும், தர்மயுத்த நாயகர் பக்கமிருந்த கொஞ்ச நஞ்சம் உள்ளாட்சி பிரதிநிதிகளும் சேலம் தலைவரின் பக்கம் சாய்ந்துட்டாங்களாம்.

இதனால் டென்ஷன் மோடுக்கு போனவர், கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர எதிர்காலத்தில் குக்கர் தலைவருடன் சேர்ந்து பயணிக்க திட்டமிட்டுள்ளாராம். இதையடுத்து தர்மயுத்த நாயகர், ஹனிபீ நகரில் குக்கர் விஐபியுடன் சேர்ந்து ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார். இந்த விஷயம் இலை கட்சியின் சேலம் தலைவரின் காதுக்கு போச்சாம்… தேனிகாரருக்கு இனி இலை கட்சியில் இடம் இல்லை. இனிமேல் அவரை பற்றி பேசாமல் இலை கட்சியை முன்பை விட கூடுதல் வேகத்தோடு கொண்டு ெசல்ல வேண்டும் என்று தன் ஆதரவாளர்களிடம் ஆவேசப்பட்டாராம். இந்த ஆர்ப்பாட்டத்திலும் தர்மயுத்த நாயகரின் ஆதரவு குரல் அமுங்கிப் போச்சாம். இதனால் தர்மயுத்த நாயகரின் ஆதரவாளர்கள், ‘குக்கருடன் சேர்ந்தால் அடையாளத்தை இழந்து விடுவோம். பேசாமல் நாம் தனியாகவே பயணிப்போம்’ எனச் சொல்லி வந்தாங்க. ஆனால், தர்மயுத்த நாயகர் அதை காதில் வாங்கிக் கொள்ளவே இல்லையாம். இதன் எதிரொலியாக, கடந்த சில நாட்களுக்கு முன் ஹனிபீ மாவட்டத்தில் இருந்து தர்மயுத்த நாயகர் பசும்பொன் சென்றபோது, இவருடன் இணைந்து செல்ல சமுதாய இளைஞர்கள் மத்தியில் பெரிதாக ஆர்வமில்லையாம். இளைஞர் தரப்பு முழுக்க குக்கர் கட்சியினர் பின்னால் அணிவகுத்து சென்றுவிட்டதால் ஒற்றை இலக்க எண்ணிக்கையில் கார்கள் பின்தொடர தர்மயுத்த நாயகர் ஹனிபீ மாவட்டத்தில் இருந்து பசும்பொன் சென்றாராம்.

சமுதாய பலத்தை மட்டுமே வைத்து இனி அரசியல் செய்ய முடியாது என நினைத்துள்ள ஆதரவாளர்கள், தர்மயுத்தத்திடம், ‘‘கட்சியை தொடர்ந்து நடத்தினால்தான் நமக்கு பலம். எனவே, உங்களை இயக்கும் தஞ்சை, நெல்லைக்காரர்களை நம்பாமல் சேலத்துடன் உடன்பாடு கொண்டால் தான் கட்சிக்கும், நமக்கும் நல்லது’ என சொன்னாங்களாம். இதற்கு தர்மயுத்தமும், ‘விரைவில் காலம் கனியும். நீங்கள் நினைத்தது நடக்கும்’ என ஆதரவாளர்களிடம் நம்பிக்கையாகப் பேசினாராம். இதன் எதிரொலியாகவே, பசும்பொன்னில் சேலம் நாயகருக்கு ஆதரவாக தர்மயுத்த நாயகர் தன் தொண்டர்களை கண்டித்து பேசியிருந்தாராம்…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தாமரை கட்சியின் கூட்டத்தில் இருந்து எஸ்கேப் ஆன நடிகையை பற்றி சொல்லுங்களேன்…’’ என்று கேட்டார் விக்கியானந்தா.

‘‘மாங்கனி சிட்டியில் எம்எஸ்எம்இ அமைப்பு என்ற பெயரில் சமீபத்தில் ஒரு கூட்டம் நடந்திருக்கு. இதில் தாமரை கட்சியின் ஸ்டார் நடிகை ஒருத்தரும் கணவரோட கலந்துக்கிட்டாங்க. கூட்டத்தில் அந்த அமைப்பின் தமிழ்நாடு தலைவர் என்று நடிகையின் கணவர் பெயரை போட்டிருந்தாங்க. தொழில் தொடங்க ஒன்றிய அரசின் கடன் வாங்கித்தருவதாக பலரிடம் சில லகரங்களும் கூட்டத்தில் ஸ்வாகா செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கும்போதே.. அதை முன்னின்று நடத்துபவர் டுபாக்கூர் ஆபீசர் என்ற தகவல் அம்பலமானதாம். இதனால் நடிகையும், கணவரும் யாரிடமும் சொல்லாமல் கூட்டத்தில் இருந்து எஸ்கேப் ஆனார்களாம். அவர்களோடு தாமரை கட்சி நிர்வாகிகள் சிலரும் வெளியே போனாங்களாம். இந்த மோசடி புகார் இப்போது போலீஸ் கம்ப்ளைன்டாக மாறி டுபாக்கூர் ஆபீசர் உள்ளிட்ட இரண்டு பேரை அரெஸ்ட் செஞ்சிருக்காங்க.

இது ஒரு புறமிருக்க அந்த டுபாக்கூர் ஆபீசர், தென்மாவட்ட தாமரை கட்சி பிரமுகர்கள் ஆதரவுடன் மாங்கனி சிட்டியில் கல்லா கட்டியதாக புதிய சர்ச்சை கிளம்பியுள்ளது. மதுரையை சேர்ந்த தாமரை தலைவர், மஞ்சள்நகரை சேர்ந்த ஆன்மீக பிரிவு மாநில செயலாளர், மீடியா செல் மற்றும் வீடியோ செல் பொறுப்பாளர்கள் என்று சிலர், விபரம் தெரிந்தும் டுபாக்கூர் ஆபீசருக்கு உதவியுள்ளனர். இதனால் லோக்கல் நிர்வாகிகள் சிலரின் பணமும் போச்சு என்று உள்ளூர் நிர்வாகிள் பகீர் புகார் கொடுத்திருக்காங்க… இது தொடர்பாக மாநில தலைமைக்கும் புகார் அனுப்பி இருக்காங்களாம் மாங்கனி டிஸ்டிரிக்ட் தாமரை தலைகள்… குறிப்பாக நடிகையை நம்பி போட்ட பணம் வருமா வராதா என்ற டாபிக் தான் மாங்கனி சிட்டியில் ஹைலைட்…’’ என்றார் விக்கியானந்தா.

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi

Are you sure want to unlock this post?
Unlock left : 0
Are you sure want to cancel subscription?