விழுப்புரம்: விக்கிரவாண்டியில் சாலையோரம் நின்றிருந்த லாரி மீது வேன் மோதியதில் 15 பேர் காயமடைந்தனர். புருஷானூரைச் சேர்ந்த 17 பேர், துக்க நிகழ்ச்சிக்காக வேனில் சென்னை சென்றுகொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. விக்கிரவாண்டி சுங்கச்சாவடி அருகே அழுக்கு பாலம் என்ற இடத்தில் லாரி மீது வேன் மோதி விபத்துக்குள்ளானது.