செங்கோட்டை: நெல்லை, தென்காசி மாவட்டத்தில் உள்ள குவாரிகளில் இருந்து எம்சாண்ட், ஜல்லி, குண்டுக்கல் உள்ளிட்ட கனிம வளங்கள் கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுகிறது. சில லாரிகள் விதிமுறைகளை மீறி அதிக பாரம் ஏற்றி செல்வதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கேரளாவுக்கு கனிமவளங்கள் ஏற்றி சென்ற லாரியை செங்கோட்டையில் 3 போலீஸ்காரர்கள் வழிமறித்து டிரைவரிடம் லஞ்சம் வாங்கியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதையடுத்து போலீஸ்காரர்கள் அன்பரசன், சுப்பிரமணியன் மற்றும் ஜெயராஜ் ஆகிய 3 பேரை ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து தென்காசி மாவட்ட எஸ்பி சீனிவாசன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
லாரி டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய 3 போலீஸ்காரர்கள் அதிரடி மாற்றம்
previous post