திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது பைக் மோதியதில் கணவன் பலியானார். மனைவி படுகாயமடைந்தார். திருவள்ளூர் அடுத்த மேலானூர் கிராமம், மாதா கோவில் தெருவைச் சேர்ந்தவர் சேகர் (59). கூலித்தொழிலாளியான இவர் நேற்று தன் மனைவி சாந்தியை (48) அழைத்துக்கொண்டு பைக்கில் திருவள்ளூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். திருவள்ளூர் அடுத்த ஈக்காடு கண்டிகை மாதா கோவில் அருகே வந்து கொண்டிருந்தபோது சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி மீது பைக் எதிர்பாராத விதமாக மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கணவன் மனைவி இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் காயமடைந்த 2 பேரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மனைவி சாந்தி தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து புல்லரம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மீது பைக் மோதல் கணவன் பலி, மனைவி படுகாயம்
0
previous post