கொள்ளிடம், நவ. 11: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் உள்ள பட்டாசு கடைகளில் சீர்காழி தாசில்தார் இளங்கோவன் மற்றும் அதிகாரிகள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். கடைகளில் முறையாக உரிமம் பெற்று கடைகள் நடத்தப்படுகிறதா, பட்டாசு கடைக்கு தேவையான பொருட்கள் முறையாக வைக்கப்பட்டுள்ளதா, எளிதில் தீ பற்றக்கூடிய பொருட்கள் ஏதேனும் அங்கு உள்ளதா என்றும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.