ஈரோடு: லண்டன் பயணம் ரத்தா? என்று கேள்விக்கு அண்ணாமலை கூறினார். ஈரோட்டில் பாஜ மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பாஜ 2026ம் ஆண்டு தேர்தலுக்கு தயாராகி வருகிறது நாளை (இன்று) திருப்பூரில் பாஜ நிர்வாகிகள் கூட்டம் துவங்கி நடக்க உள்ளது. நான் செப்டம்பர் 2ம் தேதி இங்கிலாந்து நாட்டில் லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலையில் துவங்கும் வகுப்பில் பங்கேற்க உள்ளேன். நவம்பர் 2வது வாரத்தில் வகுப்பு நிறைவு பெறும். பாஜவில் கட்சி தலைவர் இல்லாத போதும் மற்றவர்கள் தலைவர் பணிகளை கவனிப்பார்கள்.
பாஜவின் தற்போதைய கூட்டணி, கூட்டணி ஆட்சியை முன் வைத்து தான் கூட்டணி அமைத்தோம். 2026ம் ஆண்டு தமிழகத்தில் நான்கு முனை போட்டி நடைபெறும். 2026ல் தமிழக அரசியல் களம் மாறும்.தமிழிசை சவுந்தரராஜன், அண்ணாமலை, ராதாகிருஷ்ணன் என யாராக இருந்தாலும் 5 ஆண்டுக்கு ஒரு முறை வாக்கு சதவீதம் உயரவில்லை என்றால் கட்சியில் எங்காவது தவறு இருக்கிறது என்று தான் அர்த்தம். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு சம்மந்தமாக பாஜவை சேர்ந்த வழக்கறிஞர் பால் கனகராஜிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் தவறில்லை. இவ்வாறு அவர் கூறினார்.