டெல்லி: மக்களவை தேர்தலை ஒட்டி நாடு முழுவதும் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்தது. மார்ச் 16ம் தேதி முதல் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற்ற நிலையில் தேர்தல் அறிவிப்பு வெளியான நாளிலிருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து ஆவணங்கள் இன்றி ஐம்பதாயிரத்திற்கும் மேல் கொண்டு செல்லக்கூடாது எனவும் அதற்கு மேல் கொண்டு செல்லப்படும் பணம், நகைகளுக்கு தகுந்த ஆவணங்கள் வைத்திருக்க வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சுற்றுலா பயணிகள் உள்பட ஐம்பதாயிரத்திற்கும் அதிகமாக பணம் வைத்திருந்த நபர்கள் தேர்தல் நடத்தை விதிகளால் சற்று அவதிக்குள்ளாகினர்.
இந்த நிலையில் 543 தொகுதிகளுக்கான தேர்தல் முடிவுகள் ஜூன் 4-ம் தேதி வெளியிடப்பட்டன. இதில் பாஜக 240 தொகுதிகளில் வெற்றி பெற்றது. கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஜூன் 6(இன்று) வரை தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்த நிலையில் இன்றுடன் தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மார்ச் 16ம் தேதி முதல் அமலில் இருந்த தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாகவும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 நாட்கள் ஆன நிலையில் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்படுவதாக அறிவித்துள்ளது.