கொல்கத்தா: கொல்கத்தாவில் நடந்த திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் அணி பேரணியில் பங்கேற்று முதல்வர் மம்தா பேசியதாவது: பாஜ 3வது முறையாக தொடர்ந்து ஆட்சிக்கு வந்தால் நாடு எதேச்சதிகார ஆட்சியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
பாஜ மக்களவை தேர்தலை முன்கூட்டியே அதாவது வரும் டிசம்பர் மாதம் நடத்த கூடும் என்று அஞ்சுகிறேன். மக்களவை தேர்தலுக்காக, வேறு எந்த கட்சியும் பயன்படுத்த முடியாதபடிக்கு, பாஜ அனைத்து ஹெலிகாப்டர்களையும் முன்பதிவு செய்து வைத்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.