சென்னை: மக்களவைத் தேர்தல் தோல்வி தொடர்பாக 5வது நாளாக அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். நாகை, மயிலாடுதுறை தொகுதி அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகிறார். சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நிர்வாகிகளுடனான சந்திப்பு நடைபெறுகிறது. தேர்தல் தோல்வி, அதிமுகவை பலப்படுத்துவது உள்ளிட்டவை பற்றி இபிஎஸ் கருத்துகளை கேட்டறிகிறார்.