Thursday, April 18, 2024
Home » மக்களவை தேர்தல் விதிமுறைகள் 10 நாட்களில் அமல்: ஒன்றிய அமைச்சர் தகவல்

மக்களவை தேர்தல் விதிமுறைகள் 10 நாட்களில் அமல்: ஒன்றிய அமைச்சர் தகவல்

by Dhanush Kumar

சித்ரதுர்கா: மக்களவை தேர்தல் விதிமுறைகள், இன்னும் 10 நாட்களில் அமலுக்கு வரும் என ஒன்றிய அமைச்சர் ஏ.நாராயணசாமி தெரிவித்தார். சித்ரதுர்கா மாவட்டம், ஒக்கலிகர் சமுதாய பவன் வணிக வளாகத்தில் சித்ரதுர்கா மக்களவை தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது. இதில், ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ஏ.நாராயணசாமி கலந்து கொண்டு, அலுவலகத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது. இன்னும் 10 நாட்களில் மக்களவை தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வருகிறது. மாநிலத்தில் ஏப்ரல் 3 அல்லது 4வது வாரத்தில் வாக்குப்பதிவு நடைபெற வாய்ப்புகள் உள்ளது. இதையொட்டி, இன்று முதல் தேர்தல் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளன. அடுத்த 60 முதல் 70 நாட்களுக்குள் நாம் அனைவரும் அமைப்பில் ஈடுபட வேண்டும். ஒன்றிய அரசின் சாதனைகளை அனைவரும் நம்ப வேண்டும். இப்பணியை செய்து, மாவட்டத்திலேயே பாஜவை வெற்றி பெற செய்ய கட்சி தலைவர்கள், தொண்டர்கள் முன்வர வேண்டும்.

மற்றவர்களை குறை கூறுவதற்கு பதிலாக, நமது சாதனைகளை பற்றி தெரிவிக்க வேண்டும். கடந்த தேர்தலை விட இம்முறை 10 சதவீத வாக்குகள் அதிகமாக இருக்க வேண்டும். இதன் மூலம் அனைத்து மக்களவை தொகுதிகளிலும் பாஜ வெற்றி பெற வேண்டும். ராம்மந்திர் வெறும் கோயில் அல்ல. அதுதான் ஒவ்வொரு இந்துவின் சுயமரியாதை. உலகத் தலைவர் நரேந்திர மோடி, அமித் ஷா, ஜே.பி.நட்டா போன்ற நமது தேசியத் தலைவர்கள் விரும்பியபடி 400 இடங்களுக்கு மேல் கட்சி வெற்றி பெற வேண்டும். எனவே, ஒவ்வொரு கட்டத்திலும் நேர்த்தியான பணிகளை மேற்கொள்ள வேண்டும். மக்களவை தேர்தலின் வாசலில் இருக்கிறோம். 100 நாள் கடின உழைப்பில் பாஜ செய்த அனைத்து பணிகளையும் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு தெரிவிக்கும் பணியாக இருக்க வேண்டும். இதன் மூலம் ஒன்றியத்தில் பாஜ 3வது முறையாக ஆட்சியை பிடிக்க வேண்டும்.

நாடு முழுவதும் ஒருவிதமான சிறப்பு சூழல் நிலவுகிறது. ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் பெண்கள் மீது கட்சி தனி அக்கறை கொண்டுள்ளது. ஒன்றிய அரசின் சாதனை வெற்றிக்கு உதவும். மக்களவை தேர்தல் முடியும் வரை உங்களது தனிப்பட்ட வேலையை வேறு ஒருவருக்கு மாற்றி தேர்தல் பணியில் ஈடுபடுங்கள். மாநிலத்தின் அனைத்து தொகுதிகளிலும் பாஜ வேட்பாளர் யாராக இருந்தாலும், தாமரை வெல்வதே எங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். ஒவ்வொரு தொண்டரும் காங்கிரசை தோற்கடிக்க உறுதியுடன் இருக்க வேண்டும். எந்த நிலையிலும் அலட்சியமின்றி செயல்பட வேண்டும். அதீத நம்பிக்கையுடன் சும்மா இருக்கக் கூடாது, பொறுப்புடன் பணியாற்ற வேண்டும் என்றார்.

You may also like

Leave a Comment

three × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi