சென்னை: மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்தால் நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கும் என சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆ.ராசா, என்.ஆர்.இளங்கோ கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளனர். தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி உயருமா அல்லது விகிதாச்சார அடிப்படையில் உயருமா? எனவும் ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். மக்கள் தொகை அடிப்படையில் மட்டுமே தொகுதி மறுசீரமைப்பு செய்யக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
மக்களவை தொகுதி மறுசீரமைப்பு செய்தால் நாடாளுமன்றத்தில் தென்மாநிலங்கள் பிரதிநிதித்துவத்தை இழக்கும்: ஆ.ராசா பேட்டி
0