புதுடெல்லி: மக்களவையில் நிறைவேறியதை தொடர்ந்து மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியது. இதற்கான வாக்கெடுப்பில் 215 எம்பிக்களும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். எதிர்த்து யாரும் வாக்களிக்க வில்லை. மக்களவை மற்றும் மாநிலச் சட்டப் பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா புதிய நாடாளுமன்றத்தில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட்டது. சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் அதை தாக்கல் செய்தார். நேற்று முன்தினம் மக்களவையில் மசோதா மீது விவாதம் நடந்தது. 27 பெண் எம்பிக்கள் உள்பட 60 எம்பிக்கள் விவாதத்தில் பங்கேற்று பேசினார்கள். இறுதியில் நடந்த ஓட்டெடுப்பில் மசோதாவுக்கு ஆதரவாக 454 பேரும், எதிராக 2 பேரும் வாக்களித்தனர். இதையடுத்து மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்தநிலையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் மசோதாவை தாக்கல் செய்து பேசுகையில், ‘ கடந்த 9 ஆண்டுகளில் பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக பிரதமர் மோடி அரசு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மகளிர் இடஒதுக்கீடு மசோதா மூலம் மக்களவை, மாநில சட்டசபைகளில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு அனைத்து பிரிவினருக்கும் கிடைக்கும். இந்த இடஒதுக்கீடு எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தனித் தொகுதிகளுக்கும் பொருந்தும். எந்தெந்த இடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் தீர்மானிக்கும்’ என்று பேசினார்.
அதை தொடர்ந்து மசோதா மீதான விவாதத்தை பா.ஜ தேசிய தலைவர் ஜே.பி நட்டா தொடங்கி வைத்தார்.
நேற்று முன்தினம் மக்களவையில் ராகுல்காந்தி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது பேச்சு இருந்தது. நட்டா பேசும்போது,’ பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஆதரிக்க வேண்டும். நாட்டை ஆளும் போது ஓபிசிகளைப் பற்றி காங்கிரஸ் கவலைப்படவில்லை. 1992ல் உச்ச நீதிமன்றம் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு அனைத்து பிரிவினருக்கும் கிடைக்கும். இந்த இடஒதுக்கீடு எஸ்சி-எஸ்டி பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள தனித் தொகுதிகளுக்கும் பொருந்தும். எந்தெந்த இடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்பதை தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் தீர்மானிக்கும்’ என்று பேசினார்.
அதை தொடர்ந்து மசோதா மீதான விவாதத்தை பா.ஜ தேசிய தலைவர் ஜே.பி நட்டா தொடங்கி வைத்தார். நேற்று முன்தினம் மக்களவையில் ராகுல்காந்தி பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவரது பேச்சு இருந்தது. நட்டா பேசும்போது,’ பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை அனைவரும் ஒருமித்த கருத்துடன் ஆதரிக்க வேண்டும். நாட்டை ஆளும் போது ஓபிசிகளைப் பற்றி காங்கிரஸ் கவலைப்படவில்லை. 1992ல் உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்ட பிறகே அரசு துறைகளில் ஓபிசி இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டது. இப்போது துறை செயலாளர்களில் ஓபிசியினர் 3 சதவீதம் என்று விமர்சனம் செய்பவர்கள் கடந்த 2004-2014 காலகட்டத்தில் ஓபிசி செயலாளர்களின் எண்ணிக்கை குறித்து கேட்டறிந்தார்களா? ஒரு தலைவன் தானாக தலைவனாக வேண்டும். அவர்கள் (காங்கிரஸ்) ஓபிசிகளைப் பற்றி பேசுகிறார்கள். இந்தியாவுக்கு முதல் ஓபிசி பிரதமரை (மோடி) வழங்கியது பாஜ என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
மேலும் பாஜவின் 303 மக்களவை எம்.பி.க்களில் 85 பேர் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். நாட்டில் உள்ள 27 சதவீத பாஜ எம்எல்ஏக்களும், 40 சதவீத எம்எல்சிக்களும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள். மக்களவையில் காங்கிரஸ் கட்சியின் ஒட்டுமொத்த பலத்தை விட பாஜவுக்கு ஓபிசி பிரிவைச் சேர்ந்த எம்பிக்கள் அதிகம். பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவில் இருந்து அரசியல் ஆதாயம் பெறுவது பாஜவின் நோக்கம் அல்ல. அரசியல் ஆதாயம் பெற வேண்டும் என்றால், உடனடியாக அமல்படுத்தப்படும் என்று கூறியிருப்போம். மசோதாவிற்கு அரசு பின்பற்றும் நடைமுறை ‘ஒரே வழி, குறுகிய வழி, சரியான வழி’ என்று பேசினார்.
மார்க்சிஸ்ட் எம்பி எளமரம் கரீம் பேசுகையில்,’ 2014 மற்றும் 2019ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்படும் என பாஜ உறுதியளித்தது.ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 9 ஆண்டுகள் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை இழந்ததற்கு ஆளுங்கட்சியே பொறுப்பு. கர்நாடகா மற்றும் இமாச்சல பிரதேச தேர்தல்களில் தோல்வியடைந்த பிறகு, டெல்லியில் உள்ளாட்சித் தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகு பாஜவின் தேர்தல் வித்தை இது. மணிப்பூர் பெண்கள் மீது அக்கறை காட்டவில்லை’என்றார். ஐக்கிய ஜனதா தளம் எம்பி ராம்நாத் தாக்கூர்,’ மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை இப்போது திடீரென அவசரமாக கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன?’ என்று கேள்வி எழுப்பினார்.
பாரத ராஷ்டிர சமிதி (பிஆர்எஸ்) எம்பி கே கேசவ ராவ் பேசுகையில், ‘பெண்கள் இடஒதுக்கீட்டிற்கான செயல்முறையை விரைவுபடுத்த வேண்டும். இதற்கு 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பை அளவுகோலாக எடுத்துக் கொள்ளலாம். எல்லை நிர்ணய ஆணைக்குழுவை உடனடியாக நியமிக்க வேண்டும்’ என்று வலியுறுத்தியுள்ளார். இதே கருத்தை ம.தி.மு.க.வின் வைகோவும் வலியுறுத்தினார். பாஜவின் சரோஜ் பாண்டே கூறுகையில், ‘மசோதாவை கொண்டு வருவதற்கான நேரம் மற்றும் நோக்கம் குறித்து கேள்விகள் எழுப்பப்படுவது துரதிர்ஷ்டவசமானது. 75வது சுதந்திர தினம் கொண்டாடும் நிலையில், இது போன்ற சட்டம் இயற்றுவதற்கு இதுவே சிறந்த தருணம்’ என்றார்.
அசாம் கண பரிஷத் எம்பி பிரேந்திர பிரசாத் பைஷ்யா, ‘பெண்கள் இடஒதுக்கீடு மசோதா கடந்த காலங்களில் தோல்வியடைந்த முயற்சிகளுக்குப் பிறகு சரியான நேரத்தில் வந்துள்ளது’ என்று குறிப்பிட்டார்.
மதச்சார்பற்ற ஜனதாதளம் தலைவர் எச்.டி.தேவேகவுடாவும்,’ நாங்கள் இந்த மசோதாவை ஆதரிக்கிறோம். நான் கர்நாடக முதல்வராகவும், பிரதமராகவும் இருந்தபோது பெண்கள் இடஒதுக்கீட்டிற்காக பல நடவடிக்கைகளை எடுத்தேன்’ என்றார். ராஷ்ட்ரீய ஜனதாதளம் கட்சியின் மனோஜ் ஜா, ‘பெண்கள் இடஒதுக்கீடு மசோதாவை இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் இதேபோன்ற சலுகைகளை வழங்குவது குறித்து பரிசீலிக்க ஒரு தேர்வுக் குழுவிற்கு அனுப்பப்பட வேண்டும்’ என்று கோரினார். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியின் விஜயசாய் ரெட்டி மசோதாவை ஆதரித்து பேசும் போது, ‘பெண்களுக்கான இடஒதுக்கீடு மாநிலங்களவை மற்றும் மாநில சட்ட மேலவைகளுக்கும் நீட்டிக்கப்பட வேண்டும்’ என்றார்.
காங்கிரசின் கே.சி.வேணுகோபால்,‘இந்த சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். மசோதாவின் கீழ் ஓபிசி பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்த மசோதாவை கொண்டு வருவதற்கு மோடி அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை. அரசியல் கணக்கீடுகளின் காரணமாகவே தற்போது இந்த சட்டத்தை கொண்டு வந்துள்ளனர். வாழ்க்கையை மாற்றும் சட்டங்கள் இதயத்திலிருந்து வர வேண்டும், தலையில் இருந்து வரக்கூடாது’ என்று பேசினார். இந்த விவாதத்தில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்களும் பேசினார்கள்.
பா.ஜ கூட்டணி ஆளும் 16 மாநிலங்களில் ஒரு பெண் முதல்வர் கூட இல்லை: திரிணாமுல் காங்கிரஸ் விளாசல்
திரிணாமுல் காங்கிரஸ் எம்பி டெரிக் ஓ பிரையன் மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் கலந்து கொண்டு பேசியதாவது: 2024ல் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அரசு கொண்டு வர வேண்டும் அல்லது மாநிலங்களவையிலும் பெண்களுக்கு ஒதுக்கீடு வழங்க வேண்டும். பா.ஜ தங்கள் கட்சியிலிருந்து மூன்றில் ஒரு பங்கு பெண்களைத் தேர்ந்தெடுக்கட்டும். தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆளும் 16 மாநிலங்களில் முதல்வராக ஒரு பெண்ணை உங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆண்கள் பெண் குணங்களை அடையும்போது கடவுள்களாக மாறுகிறார்கள் என்றும், பெண்கள் ஆண்பால் குணங்களை வளர்த்துக் கொள்ளும்போது பேய்களாக மாறுகிறார்கள் என்று உபி முதல்வர் யோகி கூறியதாக ஒரு செய்தி வெளியாகி உள்ளது. எனவே நீங்கள் ஒரு புதிய கட்டிடம் கட்டலாம், ஆனால் முதலில் உங்கள் மனநிலையை மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
2029க்குள் நிறைவேற்றுவது குறித்து பிரதமர் உறுதி அளிக்க வேண்டும்
மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை 2029ம் ஆண்டுக்குள் நிறைவேற்றுவது குறித்து சபையில் பிரதமர் உறுதி அளிக்க வேண்டும் என்று கபில்சிபல் எம்பி கூறினார். அவர் பேசும் போது,’ 2024ல் யார் ஆட்சிக்கு வருவார்கள் என்று எங்களுக்குத் தெரியாது. ஆனால் 2029ம் ஆண்டுக்குள் இந்த நடைமுறையை முடிக்கவில்லை என்றால் அவர்கள் பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வோம் என்று அறிக்கையை வெளியிட வேண்டும்’ என்றார்.
2031ம் ஆண்டு வரை தள்ளிப்போட்டது ஏன்?.. கார்கே சரமாரி கேள்வி
மகளிர் இடஒதுக்கீடு மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பேசுகையில்,’இந்த மசோதாவில் திருத்தம் செய்வது கடினம் அல்ல. உங்களால் (அரசு) இதை இப்போது செய்யலாம். ஆனால் இடஒதுக்கீடு அமல்படுத்துவதை 2031ம் ஆண்டு வரை தள்ளிப் போட்டுவிட்டீர்கள். இதற்கு என்ன அர்த்தம்?. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான இடஒதுக்கீடு எப்போதோ அமல்படுத்தப்பட்டுவிட்டது. சட்டசபை மற்றும் மக்களவையில் அமல்படுத்த இன்னும் தாமதம் ஏன்?. இன்றே செய்… கபீரின் கவிதையைச் சொல்கிறேன், நாளை என்ன செய்ய வேண்டுமோ அதை இன்றே செய். இன்றே செய்ய வேண்டியதை இப்போதே செய் என்கிறார் கபீர். இதனால்தான் நீங்கள் இதை இப்போதே செய்ய வேண்டும். இன்றே செய்யுங்கள், நாங்கள் தயாராக இருக்கிறோம். இது சட்டவிரோதமானது அல்ல’ என்று பேசினார்.
* மகளிர் இடஒதுக்கீடு மசோதா அறிமுகப்படுத்தப்பட்ட 1996ம் ஆண்டுக்குப் பிறகு ஏழாவது முயற்சியாக மீண்டும் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
* இந்தியாவில் தற்போது பதிவுசெய்யப்பட்ட 95 கோடி வாக்காளர்களில் பாதி பேர் பெண்கள். ஆனால் நாடாளுமன்றத்தில் 15 சதவீத ெபண் சட்டமன்ற உறுப்பினர்களும், மாநில சட்டசபைகளில் பெண்கள் 10 சதவீதமும் மட்டுமே உள்ளனர்.
* பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு மாநிலங்களவை மற்றும் மாநில சட்டமேல்சபைகளுக்கு பொருந்தாது.