Tuesday, April 23, 2024
Home » பாமகவுக்கு 7 மக்களவை தொகுதி 1 மாநிலங்களவை சீட்: அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ராமதாசுடன் இன்று சந்திப்பு

பாமகவுக்கு 7 மக்களவை தொகுதி 1 மாநிலங்களவை சீட்: அதிமுக தொகுதி பங்கீட்டு குழு ராமதாசுடன் இன்று சந்திப்பு

by Ranjith

* எடப்பாடி -அருள் எம்எல்ஏ சந்திப்பில் கூட்டணி உறுதியானது

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ம்தேதி நடக்கிறது. இதையடுத்து திமுக கூட்டணி இறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான தொகுதிகளையும் ஒதுக்கி கொடுத்துள்ளது. ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாங்கள் மெகா கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம் என்று தொடக்கம் முதலே கூறி வருகிறார். ஒரு சில லெட்டர்பேடு கட்சிகளை தவிர, வேறு எந்த கட்சியும் அதிமுக கூட்டணியில் இணைந்ததாக இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. தேமுதிகவுடன் அதிமுக 3கட்ட பேச்சுவார்த்ைத நடத்தியும், இதுவரை தொகுதி பங்கீடு முடிவு செய்யப்படவில்லை.

அதே நேரத்தில் தேமுதிக மற்றும் பாமக தலைவர் அன்புமணியுடன் பாஜ சார்பில் ஒன்றிய அமைச்சர்கள் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தினர். இதனால் இரண்டு கட்சிகளை கூட்டணிக்கு இழுப்பதில் அதிமுக, பாஜ இடையே கடும் போட்டி நிலவியது. பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் மாவட்ட செயலாளர்கள் பெரும்பாலும் அதிமுக கூட்டணிக்கே செல்ல விரும்புகின்றனர். ஆனால் அன்புமணி மட்டும் 10 மக்களவை தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட், ஒன்றிய அமைச்சர் பதவி வழங்குவதாக பாஜ கூறிய ஆசைவார்த்தைக்கு மயங்கியும், தன் மீது இருக்கும் வழக்குக்கு பயந்தும் அவர்கள் பக்கம் சாய்ந்தார்.

இதனால் அதிருப்தியடைந்த மாவட்ட செயலாளர்கள் கட்சி தாவ முடிவு செய்தனர். இதை கேட்டு அதிர்ச்சியடைந்த ராமதாஸ், அன்புமணியை அழைத்து பேசி உள்ளார். இந்த சூழலில் அதிமுகவும் பாமக கேட்ட 7 மக்களவை தொகுதி மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி தர முன்வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அதிமுக-பாமக இறுதிக்கட்ட பேச்சுவார்த்தை நேற்று மாலை சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி வீட்டில் நடந்தது. அப்போது சேலம் மேற்கு தொகுதி பாமக எம்எல்ஏ அருள், எடப்பாடி பழனிசாமியுடன் சுமார் ஒரு மணி நேரம் நடந்த பேச்சுவார்த்தை நடத்தினார். இதில்அதிமுக கூட்டணியில் பாமக இணைவதை உறுதி செய்துள்ளது.

இதுகுறித்து பாமக நிர்வாகிகள் கூறியதாவது: பாஜகவுடன் கூட்டணி என்பது, கட்சியின் தலைவர் அன்புமணியின் விருப்பமாக இருந்தது. ஆனால் மாவட்ட செயலாளர்கள் அனைவரும் அதிமுக கூட்டணியில் இணையவேண்டும் என்பதையே வலியுறுத்தி வந்தனர். பாஜகவுடன் கூட்டணி சேரும் கட்சிகளை ஒடுக்குவதிலும், அழிப்பதிலும் அது மும்முரம் காட்டும். இதற்கான பல உதாரணங்கள் வடமாநிலங்களில் நடந்துள்ளது. இதை அன்புமணியிடம் சொல்ல முடியாதவர்கள், நிறுவனர் ராமதாசை சந்தித்து கண்ணீர் மல்க முறையிட்டனர்.

அவரது விருப்பமும், அதிமுகவுடன் கூட்டணி என்பதில் தான் இருந்தது. இதையடுத்து, அவர் அன்புமணியிடம் பேசி, அதிமுக கூட்டணியில் சேர அறிவுறுத்தியுள்ளார். ஆனால் பாஜகவுடன் பாமக கூட்டணி என்ற தகவல், எடப்பாடி பழனிசாமிக்கு சற்று மனவருத்தத்தை ஏற்படுத்தியதாக அறிந்தோம். இதையடுத்து சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் நெருங்கிய நட்பில் இருக்கும் பாமகவின் சட்டமன்ற கொறடாவான அருள் எம்எல்ஏ, அவரை தூதுவராக சந்தித்து பேசியுள்ளார்.

இதில் பாமக நிறுவனரின் விருப்பங்களையும் அவர் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். அதிமுக கூட்டணியில் ஏழு நாடாளுமன்றத் தொகுதிகளும், ஒரு மேல்சபை எம்பி பதவியும் பாமகவிற்கு ஒதுக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், அதிமுக தொகுதி பங்கீட்டு குழு, இன்று தைலாபுரத்தில் பாமக நிறுவனர் ராமதாசையும், தலைவர் அன்புமணியையும் சந்தித்து பேச வாய்ப்புள்ளது. இதை தொடர்ந்து இருகட்சிகளுக்குமான கூட்டணி ஒப்பந்தம் நாளை மறுநாள் கையெழுத்தாகும். இவ்வாறு நிர்வாகிகள் கூறினர்.

* தேர்தல் செலவு பணிந்த அதிமுக
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து பாமக போட்டியிட்டது. அப்போது தேர்தல் செலவுகளை அதிமுகவே பார்த்துக் கொண்டது. நாடாளுமன்றத் ேதர்தலிலும், இந்த செலவை அதிமுகவே ஏற்கவேண்டும் என்பது பாமகவின் பிரதான கோரிக்கையாக இருந்துள்ளது. இதுவே கூட்டணி இழுபறிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமியை, அருள் எம்எல்ஏ நேரடியாக சந்தித்து பேசியதில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. தேர்தல் செலவுகளை அதிமுக ஏற்பதாக உறுதியளித்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

You may also like

Leave a Comment

5 × 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi