வேளச்சேரி: தரமணி, கானகம் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (55). தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 15ம் தேதி, வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் சொந்த ஊருக்கு சென்றார். அங்கிருந்து நேற்று காலை வீடு திரும்பினார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைத்திருந்த 25 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிந்தது. இதுகுறித்த புகாரின் பேரில், தரமணி போலீசார் விசாரித்து வருகின்றனர்.