Monday, July 22, 2024
Home » LOAN ஆப்பிலும் லோன் வாங்கலாம்!

LOAN ஆப்பிலும் லோன் வாங்கலாம்!

by kannappan

நன்றி குங்குமம் தோழி உங்களுக்கு பர்சனல் லோன் வேண்டுமா என்று மாதம் ஒரு முறையாவது  நம்முடைய கைபேசியில் இனிமையாக ஒரு பெண்ணுடைய குரல் ஒலிக்கும். நாமும் வாங்கலாம் என்று முன் வரும் போது, கிரெடிட் கார்ட் உள்ளதா சிபில் ஸ்கோர் பார்க்க வேண்டும் என்று பல கண்டிஷன்களை முன் வைப்பார்கள். இனி பர்சனல் லோன் வாங்க அலைய வேண்டியது இல்லை. உங்க கைப்பேசியில் உள்ள இந்த ஆப்களே அதற்கான வேலையை செய்திடும்.KreditBeeInstant Personal Loan Online Appஇந்த ஆப் ஒரு தனிப்பட்ட கடன் மற்றும் இளைஞர்களுக்கான கிரெடிட் மேடாகும். தேவைப்படும் கடன் தொகையை நீங்கள் ஆன்லைனிலேயே விண்ணப்பிக்கலாம். ஆரம்ப தொகையாக ரூபாய் ஒரு லட்சம் வரை கடன் பெறலாம். பணம் நேரடியாக உங்கள் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்படும். இதற்கான வட்டி 1.5% முதல் நாம் பெறும் தொகையை பொறுத்து மாறுபடும். ஆவணங்களை சரி பார்த்த 15 நிமிடங்களில் பணம் அக்கவுண்டில் ெடபாசிட் செய்யப்படும்.  18 வயதிற்கு மேல் மாத வருமானம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். ஆவணங்கள்: வாக்காளர் அட்டை / ஓட்டுனர் உரிமம் / பாஸ்போர்ட் / ஆதார் அட்டை யில் ஏதாவது ஒன்று மற்றும் பான் கார்ட் வழங்க வேண்டும். சில சந்தர்ப்பங்களில், உங்கள் நிறுவனத்தின் பெயர், அலுவலக அடையாள அட்டை, அலுவலக மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களும் தேவைப்படும்.எவ்வாறு செயல்படுகிறது?*    முதலில் KreditBee ஆப்பை உங்கள் கைபேசியில் தரவிறக்கம் செய்யுங்கள்.*    முகநூல் வழியாக பதிவு செய்யுங்கள்.*    உங்களின் அடிப்படை விவரங்களை நிரப்புங்கள்.*    தகுதி பெற்றவர்கள் வாக்காளர் அட்டை / ஓட்டுனர் உரிமம் / பாஸ்போர்ட் / ஆதார் அட்டை மற்றும் பான் கார்ட் போன்ற விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.*    உங்களின் ஆவணங்களை சரிபார்த்த பிறகு உங்களுக்கான கடன் தொகையை  பெற்றுக் கொள்ளலாம்.*    பெங்களூர், ஹைதராபாத், மும்பை, தானே, புனே, குர்கான், நொய்டா, கஜியாபாத், ஃபரிதாபாத், கொல்கத்தா, ஜெய்ப்பூர், சண்டிகர், சென்னை, காஞ்சிபுரம், ஹவுரா, அகமதாபாத், சூரத், வதோதரா, ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதய்பூர், லூதியானா, சண்டிகர், லக்னோ, கான்பூர், கொச்சி, இந்தூர், போபால், விஜயவாடா, குண்டூர், விசாகப்பட்டினம், நாக்பூர் மற்றும் நாசிக் போன்ற முக்கிய நகரங்களில் மட்டுமே செயல்படும்.UpwardsQuick Instnt Loan atLow Interest and EMIவீட்டை புதுப்பிக்கவோ, திருமண செலவோ, குழந்தைகளின் படிப்பு செலவோ… எதுவாக இருந்தாலும், சில மணி நேரங்களில் எளிதான முறையில் கடனை பெற Money View உதவுகிறது. இந்த இலவச ஆப் மூலம் தனிப்பட்ட முறையில் விரைவாக கடனை பெற்றுக் கொள்ள எளிதான வழி. விரைவானது, ரூபாய் 5 லட்சம் வரை கடன் பெற விண்ணப்பிக்கலாம். உங்களின் கடன் தொகை மற்றும் அதன் பயன்பாட்டினை பொருத்து திருப்பி செலுத்தும் காலத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம். முழுக்க முழுக்க ஆன்லைன் முறையில் செயல்படும் திட்டம். கடன் ஒப்புதலுக்கு ஆவணங்களின் விவரங்கள் தேவையில்லை.செயல்முறை*    முதலில் Money View ஆப்பினை உங்க கைபேசியில் டவுன்லோட் செய்யவும்.*    பெறவேண்டிய கடன் தொகையை தேர்வு செய்யுங்கள்.*    ஆவணங்களைப் பதிவேற்றவும் மற்றும் கடன் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யவும்.*    தகுதி மற்றும் ஆவணங்கள் சரிபார்க்கப் படும்.*    கடைசியாக கடன் ஒப்பந்தம் மதிப்பாய்வு செய்து சமர்ப்பிக்க வேண்டும்.*    கடன் தொகை 10,000 முதல் ₨ 5,00,000 வரை இருக்கும்.*    கடன் கால அளவு 3- 36 மாதங்கள்.*    வருடாந்திர வட்டிவிகிதம் – 16% முதல் 24% வரை கடன் தொகைக்கு ஏற்ப மாறுபடும்.*    செயலாக்க கட்டணம் 2.5% முதல் 4% வரை வேறுபடும்.Money Viewகுறுகிய கால கடனுக்காக ரூ 15,000 முதல் ரூ 1,00,000 வரை பெறுவதற்கு Upwards இந்தியாவின் விரைவான தனிநபர் கடன் வழங்கும் ஆப்.  ஆசிரியர்கள், மென்பொருள் பொறியாளர்கள், கணக்காளர்கள், சில்லறை விற்பனையாளர் ஊழியர்கள், நர்ஸ்கள்… என குறைந்தபட்ச சம்பளம் ரூ.15000 பெறுபவர்களுக்கு கடன் வழங்கப்படும். *               தனிப்பட்ட கடன்களுக்கான விரைவு அனுமதிகள்.*    கடன் தொகை 15,000 – ரூ .1,00,000.*    கடன் கால அளவு 6 மாதங்கள் – 3 ஆண்டுகள்.*    அனைத்தும் மொபைல் பயன்பாடு என்பதால் விரைவாக செயல்படும்.*    பான் கார்ட், சம்பள விவரங்கள் போன்ற ஆவணங்கள் செலுத்தினால் போதும்.*    ஓரிரு நாட்களில் கடன் தொகை வங்கி கணக்கில் செலுத்தப்படும்.*    21 வயது முதல் 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.*    மும்பை, புனே, தில்லி, குர்கான், நொய்டா, பெங்களூரு, சென்னை, கோயம்புத்தூர், திருப்பூர், ஹைதராபாத், செகந்திராபாத், ரங்கா ரெட்டி, அகமதாபாத், ஜெய்ப்பூர், இந்தூர் என 30க்கும் மேற்பட்ட நகரங்களில் செயல்படும்.*    வீடு கட்டுமானம் மற்றும் சீரமைப்பு, மருத்துவ செலவு, சுற்றுலா, இரண்டு சக்கர வாகனம் அல்லது வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க என பல்வேறு காரணங்களுக்கு கடன் வழங்கப்படுகிறது.* ஆப்பினை முதலில் உங்க செல்போனில் தரவிறக்கம் செய்யுங்கள். பிறகு தேவையான ஆவணங்களை கொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள். அவ்வளவு தான். உங்கள் விண்ணப்பம் சரிபார்க்கப்பட்டு 48 மணி நேரத்தில் உங்கள் அக்கவுண்டில் பணம் டெபாசிட் செய்யப்படும். நீங்கள் தவறான ஆவணங்களை செலுத்தி இருந்தால், உங்களுக்கான கடன் தொகை நிராகரிக்கப்படும்.*    உங்களின் சிபில் ஸ்கோருக்கு ஏற்ப வட்டி 18% முதல் 32% வரை மாறுபடும்.*    கடன் தொகையை மூன்று முதல் 36 மாதங்களுக்குள் செலுத்த வேண்டும்.-கார்த்திக் ஷண்முகம்

You may also like

Leave a Comment

ten + 13 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi