வாஷிங்டன்: அமெரிக்கா அதிபர் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் அமெரிக்க அதிபரும் குடியரசுக்கட்சி வேட்பாளருமான டொனால்ட் டிரம்ப் ஜனநாயக கட்சியின் போட்டியாளர் கமலா ஹாரிஸ் ஆகியோர் வரும் செப்டம்பர் 10ம் தேதி ஏபிசி தொலைக்காட்சியில் நேரடியாக விவாதிக்க உள்ளனர். புளோரிடா மாகாணத்தில் உள்ள பாம்பீச் நகரத்தில் பேசிய டொனால்ட் டிரம்ப் செப்டம்பர் 10ம் தேதி ஏபிசி தொலைக்காட்சியில் நேரலை விவாதத்தில் பங்கேற்பதாக கூறினார்.
இது தவிர மேலும் 2 விவாதங்களில் கமலா ஹாரிஸ் தன்னுடன் பங்கேற்க வேண்டும் என்றும் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். செப்டம்பர் 4 மற்றும் 25 ஆகிய தேதிகளிலும் ஃபாக்ஸ் மற்றும் என்.பி.சி தொலைக்காட்சிகளில் கமலா ஹாரிசுடன் விவாதிக்க தயாராக இருப்பதாகவும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதனிடையே மிட்சிக்கனில் செய்தியாளர்களிடம் பேசிய துணை அதிபர் கமலா ஹாரிஸ் செப்டம்பர் 10ம் தேதி நேரடி விவாதத்திற்கு டிரம்ப் ஒப்புக்கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாகவும் அந்த நாளை ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும் கூறியுள்ளார்.