லிதுவேனியா நாட்டு மக்களுக்கு குளிர்ந்த பீட்ரூட் சூப். பீட்ரூட், வெள்ளரிக்காய், மோர், முட்டை உள்ளிட்டவற்றை கொண்டு சூப் செய்கின்றனர். இந்த சூப் செய்து கோடை காலத்தை லிதுவேனியா மக்கள் வரவேற்கின்றனர். இந்த சூப்பை பயன்படுத்தி பல கேளிக்கை விளையாட்டுகளுடன் தலைநகர் வில்னியஸில் ஆண்டுதோறும் பீட்ரூட் சூப் திருவிழா நடைபெறும். இந்த ஆண்டும் பீட்ரூட் சூப்பை கையில் வைத்து கொண்டு ஓடும் விளையாட்டு, பேரணி என வழக்கமான உற்சாகத்துடன் பீட்ரூட் சூப் திருவிழா அமர்களமானது.