புதுடெல்லி: மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலின் ஜாமீன் மனு மீது ஒருவாரத்தில் பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் முதல்வர் கெஜ்ரிவால் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதேவழக்கில் கடந்த மாதம் 26ம் தேதி சிபிஐ கைது செய்தது. இதையடுத்து இந்த வழக்கில் கெஜ்ரிவாலுக்கு ஜூலை 12ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கடந்த 29ம் தேதி உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் கெஜ்ரிவால் டெல்லி உயர்நீதி மன்றத்தில் கடந்த வாரம் தனித்தனியாக இரண்டு மனுக்களை தாக்கல் செய்திருந்தார். இந்த மனு டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, “ கெஜ்ரிவால் ஜாமீன் கேட்ட மனுவுக்கு சிபிஐ ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டார்.
மதுபான கொள்கை முறைகேடு வழக்கு கெஜ்ரிவால் ஜாமீன் மனுவுக்கு பதிலளிக்க ஒருவாரம் கெடு: சிபிஐக்கு டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
60
previous post