சென்னை: மதுபான உரிமம், அனுமதி விதிகளில் செய்த திருத்தம் வரும் கூட்டத்தொடரின் போது பேரவையில் தாக்கல் செய்யப்படும் என்று தமிழ்நாடு அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளார். சர்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானம் பரிமாற உரிமம் வழங்கும் வகையில் திருத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிகளில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டதை எதிர்த்து வழக்கறிஞர் கே.பாலு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.