சென்னை: மது தயாரிக்க பயன்படுத்தப்படும் தூய்மையான ஆல்கஹாலுக்கு இரட்டை வரி விதிக்கும் முடிவுக்கு தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உயர் தூய்மை ஆல்கஹால் மீது இரட்டை வரி விதிப்பதில் நிர்வாக நடைமுறை சிக்கல் உள்ளது என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளார். உயர் தூய்மை ஆல்கஹாலை அதிகம் இறக்குமதி செய்யும் மாநிலமான தமிழகத்திற்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தும். சிறுதானிய பொருள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்கும் பரிந்துரைகளை தமிழகம் ஏற்றுக் கொள்கிறது என தங்கம் தென்னரசு தெரிவித்திருக்கிறார்.