புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் பாரதிய ராஷ்ட்ரிய சமிதி கட்சி தலைவரும், தெலங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திர சேகர ராவின் மகளுமான கவிதா அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ளார். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட டெல்லி முன்னாள் துணை முதல்வர் சிசோடியாவுக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கவிதா மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுக்கள் மீது நாளை விசாரணை நடைபெற உள்ளது.