விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்த எக்கியர்குப்பத்தில் கடந்த மே 13ம் தேதி மெத்தனால் என்ற விஷ சாராயம் குடித்து 13 பேர் பலியாயினர். இதுதொடர்பாக விழுப்புரம் சிபிசிஐடி போலீசார், கொலை வழக்கு பதிந்து சாராய வியாபாரிகள் அமரன், ஆறுமுகம், ரவி, மண்ணாங்கட்டி, முத்து, குணசீலன் மற்றும் மெத்தனால் சப்ளை செய்த புதுச்சேரிபர்கத்துல்லா என்கிற ராஜா உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கள்ளச்சாராய வியாபாரிகள் முத்து, அமரன், ரவி, மண்ணாங்கட்டி, ஆறுமுகம் ஆகிய 5 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் பழனி நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதன்படி சிறையில் உள்ள 5 பேரிடமும் அந்த உத்தரவு நகலை சிபிசிஐடி போலீசார் வழங்கினர்.
சாராய வியாபாரிகள் 5 பேர் மீது குண்டாஸ் பாய்ந்தது
previous post