காங்கயம், நவ.9: காங்கயம் மற்றும் நால்ரோடு பகுதிகளில் நேற்று காங்கயம் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, நெய்யக்காரன்பாளையம் அருகே உள்ள டாஸ்மாக் பகுதியில் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த நபரை மடக்கி பிடித்து கைது செய்தனர்.
விசாரணையில், சிவகங்கை மாவட்டம், என்.புதூர் பகுதியைச் சேர்ந்த பொன்துரைபாண்டியன் (30) என்பதும் தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்து அவரிடம் இருந்த 10 மது பாட்டில்கள் மற்றும் ரூ.560 ரொக்கம் ஆகியவற்றை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.