டெல்லி: ED வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் என்பது விதியல்ல என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. சத்தீஸ்கரில் மதுபான வழக்கில் 9 மாதமாக சிறையில் உள்ளவருக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் அடைக்கப்பட்டு ஓராண்டு ஆகவில்லை என அமலாக்கத்துறை கூறியிருந்தது. வழக்கில் அதிகபட்ச தண்டனையான 7 ஆண்டு வரை குற்றம் சாட்டப்பட்டவர் சிறையில் இருக்க வேண்டுமா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது. மேலும், மதுபான வழக்கில் விசாரணை என்பது விரைவில் முடியும் நிலையில் இல்லை. மதுபான வழக்கில் 450க்கும் மேற்பட்ட சாட்சிகள் விசாரிக்கப்பட வேண்டியுள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
மதுபான வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் ஓராண்டு சிறையில் இருக்க வேண்டும் என்பது விதியல்ல: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கண்டிப்பு
0