கோடைகாலத்தில் எப்படிப்பட்ட மேக்கப் போட்டுக்கொண்டாலும் வெயிலில் சென்ற மறுகணம் அனைத்தும் உருகி வழிந்துவிடும். எனவே தான் வெறும் ஐப்ரோ, சன் ஸ்க்ரீன் உடன், பிரைட், அடர் நிற லிப்ஸ்டிக் போட்டுக்கொள்ள மேக்கப் இல்லாமலேயே முகம் பளிச்சென மின்னும். ஆனாலும் லிப்ஸ்டிக் பயன்படுத்தும்போது சில முக்கிய விஷயங்களை கவனத்தில் எடுத்துக்கொள்வது அவசியம். அதிலும் கோடையில் சுட்டெரிக்கும் வெயில், வெப்பம், ஈரப்பதம், வியர்வை ஆகியவை லிப்ஸ்டிக் நீடித்திருப்பதை பாதிக்கக்கூடும். சிலருக்கு வியர்வையும், லிப்ஸ்டிக் கெமிக்கலும் இணைந்து அலர்ஜியைக் கூட உண்டாக்கும். கோடைகாலத்தில் லிப்ஸ்டிக் பயன்படுத்த சில முக்கிய ஆலோசனைகளும், நிறங்கள் குறித்த டிப்ஸ்களும் இதோ.
குறிப்புகள்:
1. லிப் பாம் மூலம் துவங்கவும்
லிப்ஸ்டிக் போடுவதற்கு முன்னர் SPF கொண்ட லிப் பாம் தடவுவது அவசியம். இது உலர்வு மற்றும் சூரியக்கதிர்களின் தாக்கத்திலிருந்து உதடுகளை பாதுகாக்கும். மேலும் லிப் பாம் + லிப்ஸ்டிக் இரண்டு கோட்டிங் போல் இதழ்களை வெப்பத்திலிருந்து பாதுகாக்கும்.
2. மாட் லிப்ஸ்டிக் (Matte) பயன்படுத்த முயற்சிக்கவும்
மாட் வகை லிப்ஸ்டிக்குகள் நீண்ட நேரம் நீடிக்கக் கூடியவை. க்ரீம் அல்லது லிக்விட் லிப்ஸ்டிக்குகள் வெப்பத்தில் உருகும் வாய்ப்பு அதிகம். எனவே தவிர்க்கவும்.
3. லிப் லைனர் பயன்பாடு
லிப் லைனர் உபயோகிப்பதால் லிப்ஸ்டிக் உருகி கீழே இறங்காமல் இருக்கும். மேலும், லிப்ஸ்டிக் நீடித்து இருக்க உதவும். ஒருவேளை லிப்ஸ்டிக்கே அழிந்தால் கூட லைனர் அழகான இதழ் வடிவத்தை அப்படியே வைத்திருக்கும்.
4. லிப்ஸ்டிக் ஸ்டெயின் அல்லது லிக்விட்
லிப்ஸ்டிக்ஒருவேளை ஏசியில் நிகழும் விழாக்கள், மாலை நேர சந்திப்புகள் எனில் ஸ்டெயின் வகை லிப்ஸ்டிக்குகள், குறிப்பாக லிக்விட் வகைகள், கோடையில் மிகவும் பயனுள்ளவை. அவை கண்ணீர், வியர்வை போன்றவற்றை எதிர்க்கும் வகையில்இருக்கும்.
5. லிப்ஸ்டிக்கைரெஃப்ரிஜிரேட்டரில்வைக்கவும்
கோடை வெப்பத்தில் லிப்ஸ்டிக் உருகாமல் இருக்க, அதை குளிர்சாதனப் பெட்டியில் வைப்பது நல்லது. குறிப்பாக க்ரீம் வகைகளை குளிர்வான பகுதியில் வைக்கவும். இல்லைஎனில் தெர்மாகூல் பெட்டிகளைக் கூட பயன்படுத்தலாம்.
6. இயற்கை நிறங்கள் & லைட் ஷேட்கள் தேர்வு செய்யவும்
கோடையில் அடர் நிறங்களை மாலையிலும், ஃப்ரெஷ் பிங்க், கொரல், நியூட் போன்ற மென்மையான நிறங்கள் ஹைட்ரேட்டட் லுக் தரும். எனினும் இவற்றை டஸ்கி நிறம் கொண்டவர்கள் தவிர்க்கலாம். இல்லை எனில் டல்லான லுக் கொடுக்கும். கோடையில் வேலைக்குச் செல்லும் பெண்களோ, வெளியே அதிக நேரம் செலவிடுபவர்களோ இந்த வழிகாட்டுதல்களையும், நிறத் தேர்வுகளையும் பின்பற்றலாம்.
உங்களுடைய சரும (skin tone) நிறத்திற்கு ஏற்ப சரியான லிப்ஸ்டிக் நிறத்தை தேர்வு செய்தால் உங்கள் முகம் பிரகாசிக்கும். கீழே இந்தியர்களில் பொதுவாகக் காணப்படும் சரும நிறங்களுக்கேற்ப
லிப்ஸ்டிக் நிறங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன:
1. வெளிர் சருமம்
(Fair Skin Tone)
ஏற்ற நிறங்கள்:
* பிங்க் (baby pink, rose pink)
* கொரல்
* பீச்
* மென்மையான ரெட்
*மௌவ் (mauve)
தவிர்க்க வேண்டியவை:
* மிக அடர் மற்றும் டார்க் ஷேட்கள் (பழுப்பு, வெங்காய நிறம்).
2. கோதுமை நிறம் அல்லது மாநிற சருமம் (Medium or Wheatish Skin Tone)
ஏற்ற நிறங்கள்:
* ப்ளம் (plum)
* டஸ்கி ரோஸ்
* பெர்ரி (berry tones)
* டீப் கொரல்
* பிரைட் ஆரஞ்சு
* செங்கல் சிவப்பு (brick red)
தவிர்க்க வேண்டியவை:
* மிக லைட் நியூட் ஷேட்கள்
3. கறுப்பு மற்றும் கோல்டன் டஸ்கி சருமம் (Dusky/Deep Skin Tone)
ஏற்ற நிறங்கள்:
* பர்கண்டி
* வைன்
* டீப் ரெட்
*சாக்லேட் ஷேட்கள்
* காரமல்
*டெரகோட்டா
தவிர்க்க வேண்டியவை:
* பாஸ்டல் மற்றும் வெளிர் பிங்க் போன்ற வெளிர் நிறங்கள்.
சிறந்த டிப்:
தினசரி பயன்படுத்துவது அல்லது புகைப்படம்/பிரைடல்/இன்ஸ்டாகிராம் லுக் பொறுத்து கூட லிப்ஸ்டிக் ஷேட் தேர்வு மாறும். ஒவ்வொரு சருமத்துக்கும் நியூட் ஷேட், பிரைட் ஷேட், ஈவினிங் ஷேட் என்று வேறுபடும்.மேலும் இன்ஸ்டா/ஸ்னாப் உள்ளிட்ட ஃபில்டர்கள் பயன்படுத்தும் போதும் லிப்ஸ்டிக் நிறத் தேர்வில் கவனம்செலுத்தவும்.
இந்திய காலநிலைக்கும் , சருமத்திற்கும் ஏற்ற பிராண்டுகள் எவை?
* Maybelline Super Stay Matte Ink
* Lakme 9to5 Primer + Matte
* Sugar Smudge Me Not Liquid Lipstick
* L’Oral Rouge Signature
* Kay Beauty Matteinee Matte Lipstick (SPF 20)
* Mamaearth Matte
* Just Herbs Organic lipsticks & liquids
* sugar Brand Matte
* Brwn Liquid Lipsticks & Crayons
எந்த பிராண்டானாலும் அதே பிராண்டில் லிப் பாம் பயன்படுத்துவது நல்லது. ஒரு லிப் பாம் அல்லது லிப் பிரைமர் தடவி, லிப்ஸ்டிக் போடவும். இதனால் லிப்ஸ்டிக் நன்கு ஒட்டும், நீடிக்கும் மற்றும் உதடு பாதுகாக்கப்படும். லிப்ஸ்டிக்கை கூடுமானவரை பிரஷ் கொண்டு தடவவும். அதேபோல் காலையில் போட்டுக்கொண்ட லிப்ஸ்டிக் மேலேயே மீண்டும் மதியம் அல்லது மாலையில் பூசிக் கொள்ளாமல் பழைய லிப்ஸ்டிக்கை சுத்தமாக துடைத்துவிட்டு புதிதாகவே எப்போதும் லிப்ஸ்டிக் பயன்படுத்துங்கள். இல்லையேல் திட்டுத் திட்டாக தோற்றம் கொடுக்கும். எப்படிப்பட்ட சோர்வாக இருப்பினும் இரவில் தூங்குவதற்கு முன்பு மேக்கப், லிப்ஸ்டிக் அனைத்தையும்ரிமூவர் கொண்டு சுத்தம் செய்துவிட்டு , முகத்தைக் கழுவி விட்டு தூங்குவதுதான் நல்லது. சருமம் செல்கள் புத்துணர்வு பெற இதுவே சரியான வழி.
– ஷாலினி நியூட்டன்.