சென்னை : சென்னை அருகே வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிங்கம், மான்கள் உலாவிடும் பகுதியை பார்வையிட மீண்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பின் சிங்கம், மான்கள் உலாவிடும் பகுதியை பார்வையாளர்கள் பார்வையிட அனுமதி தரப்பட்டுள்ளது; QR Code நுழைவுச்சீட்டு வசதி உள்ளிட்டவற்றை அமைச்சர் மதிவேந்தன் தொடங்கி வைத்தார்.