LAIQA மொபைல் செயலி பெண்களின் ஹார்மோன்கள் தொடர்பான அத்தனைப் பிரச்னைகளுக்கும் செயற்கை நுண்ணறிவுடன் (AI-powered) பல வழிகளையும், ஆலோசனைகளையும் வழங்கும் மருத்துவச் செயலி. இது கர்ப்பத்துக்கு முன்பான ஆரோக்கியப் பராமரிப்பு முதல் வயதுசார்ந்த மாற்றங்கள் (menopause) வரைபல்வேறு அம்சங்களை வழங்குகிறது. இந்தச் செயலி, உணவு, வாழ்வியல் மற்றும் மன அழுத்த மேலாண்மை போன்றவற்றுக்கான பரிந்துரைகளை தனிநபர் அடிப்படையில் வழங்க AI-யைப் பயன்படுத்துகிறது. ஹார்மோன்களின் மாற்றங்களை கண்காணிக்க ‘‘மாதவிடாய் சார்ந்த கேள்விகள் & பதில்கள்” (Menstrual Wellness Questionnaire – MWQ) அம்சமும் இதில் உள்ளன.மேலும், நிபுணர்களின் குழுவின் ஆலோசனையையும் பயனர்களின் தேவைக்கேற்ப வழங்குகிறது. பெண்களின் ஹார்மோன்கள் சார்ந்த உடல்நலத்திற்கு சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. மாதந்தோறுமான கண்காணிப்பு, அதன் மூலம் ஆலோசனைகள் மற்றும் வழிகள் என பெண்களுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது இந்தச் செயலி.