லக்னோ: உத்தரப்பிரதேசத்தில் ஒரே நாளில் மின்னல் தாக்கியது உள்ளிட்ட சம்பவங்களில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் மீட்பு ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், புதன்கிழமை இரவு 7 மணி முதல் வியாழன்று இரவு 7 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கியது, பாம்பு கடித்து மற்றும் நீரில் மூழ்கி என 54 பேர் உயிரிழந்துள்ளனர். பிரதாப்கர் மாவட்டத்தில் அதிகளவிலான உயிரிழப்புக்கள் பதிவாகி உள்ளது.
மின்னல் தாக்கியதில் மட்டும் 12 பேர் இங்கு உயிரிழந்துள்ளனர். பிரயாக்ராஜ் மற்றும் படேபூரில் தலா நான்கு பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர். இதேபோல் ஹமிர்பூரில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். படேபூர், பிரதாப்கர், எடா மற்றும் பாண்டாவில் நீர்நிலைகளில் மூழ்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர். அமேதி மற்றும் சோன்பத்ராவில் தலா ஒருவர் பாம்பு கடித்து இறந்துள்ளனர்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல் பீகாரில் 24 மணி நேரத்தில் 21 பேர் மின்னல் தாக்கி இறந்துள்ளனர்.