எல்ஐசி வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் 200 ஜூனியர் அசிஸ்டென்ட்கள்
பணி: Junior Assistants. மொத்த காலியிடங்கள்: 200.
சம்பளம்: ரூ.20,000-32,800. வயது: 01.07.2024 தேதியின்படி 21 முதல் 28க்குள். அதிகபட்ச வயது வரம்பில் எஸ்சி/எஸ்டியினருக்கு 5 ஆண்டுகளும், ஒபிசியினருக்கு 3 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் தளர்வு அளிக்கப்படும்.
தகுதி: குறைந்த பட்சம் 60% மதிப்பெண்கள் பெற்று ஏதாவதொரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். கம்ப்யூட்டரில் பணிபுரியும் திறன் பெற்றிருக்க வேண்டும்.எல்ஐசி வீட்டு வசதி நிதி நிறுவனத்தில் நடத்தப்படும் ஆன்லைன் எழுத்துத் தேர்வின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர். தமிழ்நாட்டில் சென்னை, கோவை, தஞ்சை, மதுரை, நாகர்கோவில், நெல்லை ஆகிய மையங்களில் நடைபெறும்.
கட்டணம்: பொது மற்றும் ஒபிசியினருக்கு ரூ.800/-. இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டியினர் கட்டணம் செலுத்த வேண்டும்.www. lichousing.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: இன்று (14.08.2024.)