புதுடெல்லி: இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த போக்குவரத்து நிறுவனமான அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் கடந்த வாரம் மிகப்பெரிய உள்நாட்டு பத்திர வெளியீட்டில் எல்ஐசி மூலம் ரூ.5,000 கோடி திரட்டியுள்ளதாகக் கூறியிருந்தது. 15 ஆண்டு மாற்ற முடியாத கடனீட்டுப் பத்திரம் மூலம் எல்ஐசியில் இருந்து நிதியை திரட்டியதாக அதானி குழுமம் தெரிவித்து இருந்தது. ஆண்டுக்கு 7.75 சதவீத கூப்பன் விகிதம் வழங்கவும், இந்த கடன் பத்திரங்களை நேரடியாக பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதானி குழுமத்தில் பொதுத்துறை நிறுவனமாக எல்ஐசி திடீரென ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு செய்து இருப்பதை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுதொடர்பாக ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில்,’பணம், பாலிசி, பிரீமியம் உங்களுடையது; பாதுகாப்பு, வசதி, ஆதாயம் எல்லாம் அதானிக்கு’ என்று குறிப்பிட்டுள்ளார்.
எல்ஐசி ரூ.5 ஆயிரம் கோடி முதலீடு பிரீமியம் உங்களுடையது ஆதாயம் அதானிக்கு.. ராகுல்காந்தி கடும் விமர்சனம்
0