சென்னை: எல்ஐசி நிறுவனத்தின் பீமா சகி திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைக்கிறார். இதுகுறித்து எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: எல்ஐசி நிறுவனம் பீமா சகி என்ற திட்டத்தை இன்று அறிமுகம் செய்கிறது. இந்த திட்டத்தை அரியானா மாநிலம் பானிபட் நகரில் பிரதமர் நரேந்திர மோடி இன்று துவக்கி வைக்கிறார். இது பொருளாதார வளர்ச்சி அடைந்த மகளிர் மூலம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையின் ஓர் அங்கமாகும்.
இந்த விழாவில் அரியானா மாநில ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, ஒன்றிய நிதி மற்றும் கார்ப்பொரேட் விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன், அரியானா மாநில முதல்வர் மற்றும் ஒன்றிய, மாநில அமைச்சர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாறு எல்ஐசி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.