தென்காசி: தென்காசியில் அகில இந்திய காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தலைவர் ரமேஷ் நிருபர்களிடம் நேற்று கூறுகையில், ‘பொதுத்துறை நிறுவனமான எல்ஐசியின் பல்வேறு கோரிக்கைகளின் மீது அரசு செவிசாய்க்கவில்லை 50க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்களில் எல்ஐசி போட்டிப் போட்டு சிறப்பான சேவையை வழங்கி வருகிறது. தற்போது நடைபெற்ற விமான விபத்தில் கூட யாரெல்லாம் இறந்ததாக அரசால் அறிவிக்கப்பட்டதோ அவர்களுக்கு உடனடியாக இழப்பீட்டுத் தொகை, எல்ஐசி நிறுவனத்தால் வழங்கப்பட்டது. எல்ஐசி பணியாளர் பற்றாக்குறை சரி செய்யப்பட வேண்டும். இதுபோன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூலை மாதம் 9ம் தேதி நடைபெறும் ஒரு நாள் அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டத்தில் எல்ஐசி முழுமையாக கலந்து கொள்ளும்’ என்றார்.
எல்ஐசி ஊழியர்கள் ஜூலை 9ல் ஸ்டிரைக்
0
previous post