மதுராந்தகம்: மதுராந்தகம் நூலகத்தில் திருக்குறள் ஒப்புவித்தல் போட்டி நடந்தது. புத்தக திருவிழாவை முன்னிட்டு, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அனைத்து நூலகங்களிலும் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் திருக்குறள் ஒப்புவித்தல் மற்றும் பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி ஆகியவை நடத்தப்பட வேண்டும் என மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக, மதுராந்தகத்தில் உள்ள நூலகத்தில் பள்ளி மாணவிகள் பங்கேற்ற திருக்குறள் ஒப்புவித்தல், கட்டுரை போட்டி ஆகியவை நடைபெற்றன. இதில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு நூலகத்தின் சார்பில் பேனாக்கள் பரிசளிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் நூலகர்கள் ராமச்சந்திரன், குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.