Saturday, July 12, 2025

LGBT

by kannappan
Published: Updated:

நன்றி குங்குமம் டாக்டர்கொஞ்சம் நிலவு… கொஞ்சம் நெருப்பு…பதின் பருவக் குழந்தைகளுக்கு இயல்பிலேயே ஒரு பதற்றம் நெஞ்சுக்குள் இருக்கும். ஆண், பெண் இரு பால் குழந்தைகளின் பெற்றோருக்கும் தன் குழந்தை பாலியல் ரீதியாக பாதிக்கப்படக் கூடாது என்ற அச்சம் இருக்கும். இதற்கிடையில் குழந்தைகள் சந்திக்கும் பாலினக் குழப்பங்களைக் கையாள்வதைப் பற்றி பெற்றோர் மத்தியில் விழிப்புணர்வு இல்லை என்பதுதான் உண்மை. ஓர் ஆண் குழந்தை ஒரு ஹோமோ செக்ஸுவல் என்பதை உணர்ந்து பெற்றோரிடம் சொல்கிறதென்றால் அதைப் பெற்றோர் எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? அந்தக் குழந்தையை எவ்விதம் கையாள வேண்டும் என்று விளக்கம் அளிக்கிறார் மனநல மருத்துவர் ஷாலினி.அந்த 15 வயதுப் பையன் அம்மாவிடம் சொல்கிறான், ‘அம்மா நான் ஹோமோ செக்ஸுவல்’ என்று… பதறிப்போன அந்தத் தாய் கேட்கிறாள், ‘உனக்கு எப்படித் தெரியும். அப்படியிருக்காது, அதுக்கு வாய்ப்பில்லை. எதுவாக இருந்தாலும் நான் அதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், இதற்கு உளவியல் ஆலோசனை பெற வேண்டும்’ என்று சொல்கிறாள். இந்நிலையில்தான் இன்றைய குழந்தைகள் இருக்கிறார்கள். முந்தைய காலத்திலும் ஹோமோ செக்ஸுவல் இருந்திருக்கிறது. ஹோமோசெக்ஸுவல் பற்றிய விழிப்புணர்வு இல்லாத காலத்திலும் குழந்தைகளுக்கு பதின் பருவத்தில் ஹோமோசெக்ஸுவாலிட்டி பற்றித் தெரிந்துள்ளது. நமக்கு ஆண்களைப் பார்த்தால் ஈர்ப்பு வருகிறது. அதனால் நாம் கொஞ்சம் வித்தியாசமானவர்கள் என்று குழந்தைகள் தானாகவே புரிந்து கொள்கின்றனர். முன்பு இருந்த குழந்தைகள் இதை வெளியில் சொல்லப் போராடிக் கொண்டிருந்தனர். பயப்படுவது, தயங்குவது, நம்மை ஏதாவது நினைத்து விடுவார்களோ, குறைவாக நினைப்பார்களோ, சமுதாயத்தில் மரியாதை இல்லாமல் போய்விடுமோ என்ற சமூக அச்சம் குழந்தைகளுக்கு அதிகமாக இருந்தது. இப்படி இருப்பது இயல்பானதுதான். இதை நீ ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இதிலென்ன தப்புள்ளது என்ற மான உணர்வு, சுயமரியாதை உணர்வு இந்தக் குழந்தைகளுக்கு உள்ளது. பெற்றோரிடம் பேசும்போது எப்படியிருந்தாலும் அவன் என் குழந்தை. என் குழந்தையின் மேல் வைத்திருக்கும் அன்பைக் குறைக்க மாட்டேன். இந்தக் குழந்தை ஏன் இப்படி இருக்க வேண்டும். இது நார்மல் இல்லையே… இந்தக் குழந்தை பிற்காலத்தில் எப்படி குழந்தை பெற்றுக் கொள்ளும். அதனால் ஏதாவது மாற்ற முடியுமா என்று பாருங்கள். வம்சம் விருத்தியாக வேண்டாமா?’ என்ற சிக்கலை பெற்றோர் சந்திக்கின்றனர். இது பற்றிய அறிவு இன்னும் பெரியளவில் வரவில்லை.பின்னால் என்ன மாதிரியான சாத்தியக் கூறுகள் தென்படலாம் என்றால் ஹோமோ செக்ஸுவாலிட்டி என்பது Toxic masculinity-க்கு எதிராக இயற்கை ஏற்படுத்துற உக்தியாகக் கூட இருக்கலாம். அப்படி என்றால் டாக்சிக் மேஸ்குலனிட்டி என்றால் என்ன என்று நாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. நான் ஆண் என்று கெத்து காட்டுவதற்காக மீசை வளர்த்துக் கொள்வது.ஆர்ம்ஸ் வைத்துக் கொள்வது, ரவுடித்தனம் செய்வது, சர்வாதிகாரம் செய்வது, நான்தான் பெரிய ஜித்தன் என்று உணர்த்துவதற்காக பெண்களைக் கஷ்டப்படுத்துவது.பெரிய பரப்பளவில் இருக்கும் ஒரு பகுதியை, ஒரு பிராந்தியத்தை நான்தான் நிர்வகிப்பேன், நான்தான் இங்கு ஆதிக்கம் செலுத்துவேன், நான்தான் டாமினென்ட் என்று இந்த ஆண்கள் செய்பவற்றைத்தான் டாக்சிக் மேஸ்குலனிட்டி என்று சொல்கிறோம். இதனால் நாம் இழந்தது ரொம்பவே அதிகம். எல்லா நாட்டிலும் நடக்கும் போர்கள், எல்லா வீட்டிலும் நடக்கும் குடும்ப வன்முறை, ஆண்-பெண் தகராறுகளுக்கு முக்கியமான காரணம் இந்த டாக்சிக் மேஸ்குலனிட்டிதான். இது எந்தளவுக்கு ஆபத்தானது என்றால், ரொம்ப காலத்துக்கு முன் ஒரு போர் நடக்கிறது என்றால் எடுத்துக்காட்டாக சேரனுக்கும், பாண்டியனுக்கும் போர் நடக்கிறதென்றால் ஏதோ ஓர் ஊரில் சின்ன சண்டை போட்டுக் கொள்வார்கள். ஆயிரம் யானை, ரெண்டாயிரம் மனிதர்கள் என்ற அளவில்தான் அந்த யுத்தம் நடந்திருக்கும். பக்கத்து ஊர்க்காரர்களுக்கும் கூட பாதிப்பிருக்காது. ஆனால், இப்போது போர் நடந்தால் அணு ஆயுதங்கள் இருப்பதால் நம்முடைய பூமியே அழியும் அளவுக்கு ஆபத்து உள்ளது.இன்றைக்கு சமாதானம், அன்பு, சகோதரத்துவம், பாசம் இதெல்லாம் ரொம்பவும் முக்கியமானது. இந்த மாதிரியான மூளை வடிவமைப்புள்ள ஆண் எப்படியிருப்பான் என்றால் ஒரு ஹோமோ செக்ஸுவல் ஆணைப் போலவே இருப்பான். ஒரு பற்றுடன், பாசத்துடன், அன்புடன், யாரிடமும் சண்டை போடக் கூடாது, ஆதிக்கம் செலுத்தக் கூடிய ஆணைக் கூட அன்பினால் கட்டுப்படுத்திக் கொண்டு வர வேண்டும் என்ற தன்மைக்குள் ஆண்கள் இருப்பதற்கு இப்படியொரு வாய்ப்புள்ளது. இன்னொன்று நாம் பயன்படுத்தும் பொருட்கள் ஏதாவது ஹோமோசெக்ஸுவாலிட்டியை உருவாக்குகிறதா, நாம் பயன்படுத்தும் கெமிக்கல், சூழல் சீர்கேடு ஹோமோ செக்ஸுவாலிட்டிக்குக் காரணமா அல்லது காற்றில் இருக்கும் கிருமி ஏதாவது ஹோமோ செக்ஸுவாலிட்டியை உருவாக்குகிறதா என்று நிறைய விதமான ஆய்வுகள் செல்கிறது. இதன் முடிவுகள் பிற்காலத்தில் வரும். அதனால், இப்போது ஹோமோசெக்ஸுவாலிட்டி என்பது சரியா, தவறா என்ற சர்ச்சைகளுக்குள் நாம் செல்ல வேண்டாம். இப்பொழுது நாம் புரிந்துகொள்ள வேண்டியது என்னவென்றால் ஒருவர் LGBT என்பதை உணர்ந்தால் அதை கேலி செய்வதோ, கிண்டலடிப்பதோ தவறு. அது ஒரு வகையான மனநிலை. அது ஒரு வகையான உடல்நிலை. இயற்கையில் இப்படி ஒரு புதுவிதமான வடிவமைப்பு, தகவமைப்பு இருந்தால் அதற்கும் ஒரு காரணம் இருக்கும். அதனால்தான் இயற்கை அப்படியொரு மாற்றத்தை உருவாக்குகிறது. ஏற்கெனவே இருக்கும் முன் முடிவுகளில் ஆண்-பெண் என்பது மட்டும்தான் இருக்கும். வேறு எதுவும் இல்லை என்று நாமே நினைத்துக் கொண்டோம்.இயற்கை ஏற்படுத்துகிற அந்தப் புதுவிதமான ஜீவராசியை நாம் புரிந்துகொள்ளாமல் இருப்போம். இது பிளைப்பதற்கு, சர்வைவலுக்கு உண்டான புது யுக்தியாக இருக்கலாம். இருக்கும் அறிவியல் முறைகளில் ஹோமோ செக்ஸுவல். ஆனால், மிகச் சுலபமாகக் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும்.வளர்க்கவும் முடியும் என்பதால் பிள்ளைப் பேற்றைப் பெரிய பிரச்னையாகக் கருத வேண்டியதில்லை. ஆனால், பெற்றோர் சமுதாயம் என்ன நினைக்குமோ, நம் உறவினர்கள் என்ன நினைப்பார்களோ, இதை எப்படி வெளியில் சொல்வது, இவன் நடை, உடை, பாவனைகளை வைத்து இவன் ஹோமோ செக்ஸுவல் என்று கண்டுபிடித்து விடுவார்களா? என்று பெற்றோர் பயப்படுகின்றனர். பெற்றோர் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை வைத்துத்தான் சமுதாயம் குழந்தைகளிடம் எப்படி நடக்க வேண்டும் என்பதை யோசிக்கும்.ரொம்பவும் துணிச்சலாக, தைரியமாக ‘ஆமாம்’ என் பையனுக்கு ஹோமோ செக்ஸுவல் பிரச்னை உள்ளது என் பையன் ஒரு Gay என்று சொன்னால். பெற்றோரே இந்த விஷயத்தில் ரொம்பவும் கூலாக இருக்கிறார்கள், இதைப்பற்றி எதிராகப் பேசுவதற்கு, கேலி செய்வதற்கு நாம் யார்? அதைக் கூலாகத்தான் ஹேண்டில் செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவர்களின் பெற்றோர் நம்மைத் திட்டுவார்கள். சமூகம் அந்த ஹோமோ செக்ஸுவல் குழந்தைகளை ரொம்பவும் கம்பீரமாக மரியாதையுடன் நடத்த முயற்சிக்கும். குழந்தைகள் இந்த விஷயத்தில் தெளிவாக உள்ளனர். வயதுக்கு வரும் சமயத்தில் தெரிந்துவிடுகிறது. சில பகுதி அவர்களுக்கு ஏதாவது மோசமான அனுபவம் நடந்திருந்தால், ஓர் ஆண் குழந்தை விருப்பமின்றி ஹோமோசெக்ஸுவல் நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால் அதனை உரிய சிகிச்சை மூலம் சரி செய்துவிடலாம். இயல்பாகவே அந்தக் குழந்தைக்கு ஹோமோ செக்ஸுவல் ஈர்ப்பு இருக்கிறதென்றால் அந்தக் குழந்தையை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் அந்தக் குழந்தைக்கு நாம் செய்யக் கூடிய மிகப்பெரிய நன்மை. அவர்கள் நம்மை சமமாக நினைக்கும்போது அவர்களையும் சமமாக நடத்த வேண்டும். அப்போதுதான் நாம் நாகரிகம் அடைந்த சமூகம். ( Keep in touch…)எழுத்து வடிவம்: கே.கீதா

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi