சென்னை: கலைஞரின் நினைவுநாள் அமைதிப் பேரணியில் அணி திரள்வோம் என்று திமுக தொண்டர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ், தமிழர், தமிழ்நாடு மேன்மைக்காக அயராது உழைத்த கலைஞர் இப்போதும் நம் இதயத் துடிப்பாக இருக்கிறார். ஒவ்வொரு செயலிலும் கலைஞர் நம்மை இயக்கிக் கொண்டே இருக்கிறார் என்று கூறியுள்ளார்.