சென்னை: சென்னையில் நடந்த விழாவில் விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர் பொன்குமார் பேசியதாவது: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தொடர்ந்து தமிழ்நாட்டிற்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும், தமிழ்நாடு அரசுக்கும் எதிராக செயல்பட்டு வருகிறார். அரசு இயற்றிய நீட் சட்டத்துக்கு இதுவரை ஆளுநரோ, ஒன்றிய அரசோ ஒப்புதல் அளிக்கவில்லை. ஆளுநரின் இந்த அடாவடித்தனத்தால் தான் அரியலூர் மாணவி எஸ்.அனிதா தொடங்கி, குரோம்பேட்டை மாணவன் எஸ்.ஜெகதீஸ்வரன் வரை தொடர்ந்து தங்களுடைய இன்னுயிரை மாய்த்து கொள்கிற சம்பவம் நடந்து வருகிறது.
இவை எல்லாம் சர்வாதிகாரத்தின் உச்சமாகும். எனவே, இப்படிப்பட்ட சர்வாதிகாரம் அகற்றப்பட்டால் தான் ஒன்றுபட்ட இந்திய நாடு தொடர்ந்து வளர்ச்சி பாதையில் பயணிக்க முடியும். எனவே, தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களும் குறிப்பாக உழைக்கும் தொழிலாளர்கள் அனைவரும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய ஆட்சியில் உள்ள பாஜவையும், அதோடு கூட்டணியில் உள்ள கட்சிகளையும் வேரோடு அகற்றுவதற்கான உறுதியினை ஏற்க வேண்டும்.