குழந்தைப் பருவத்திலேயே நம் அனைவருக்குள்ளும் இருந்து முதலில் வெளிப்படுவது ஓவியம் வரையும் திறமைதான். ஆனால் காலப்போக்கில் நம் கவனம் தடம் மாறி வெவ்வேறு தனித்திறமைகளை வளர்த்துக்கொள்கிறோம். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் தெரியும். நாம் சிறு பிள்ளைகளாக இருக்கும்போது கரிக்கட்டை கிடைத்தால்கூட தரையிலும், சுவரிலும் கிறுக்கி நம் மனதில் தோன்றியதைக் கோடுகளாக, வட்டங்களாக, சதுரங்களாக வரைந்திருப்போம். இப்போதும் இதை உறுதிபடுத்தும் விதமாக நம் வீட்டுக் குழந்தைகள் தம் கைக்கெட்டும் உயரம் வரை பென்சில் மற்றும் பேனாவால் ஏதாவது கிறுக்கியிருப்பார்கள். உற்றுப்பார்த்தால் ஓராயிரம் ஓவியங்கள் மாடர்ன் ஆர்ட்டாக சுவரில் மலர்ந்திருக்கும். அதைக் கண்டு பெரும்பாலும் நாம் கோபப்பட மாட்டோம். காரணம் நாமும் அந்தப் பருவத்தில் இப்படித்தான் செயல்பட்டோம் என்பதால் குழந்தையின் கற்பனைத்திறனை ரசிப்போம். உண்மையில் அது விரலுக்கான அற்புதமான பயிற்சியும் கூட. கண் இமைக்கும் நேரத்தில் இரு கோடுகளை வரைந்து ஓவியமாக்கும் வித்தை இன்றைய குழந்தைகளிடம் நிறையவே இருக்கிறது. அப்படி நம் குழந்தைகளின் உள்ளத்தில் இருக்கும் உணர்வை ஊக்கப்படுத்தி , ஓவியராக்கும் சிறு முயற்சியே இந்தப் பகுதி.
ஓவியம் வரைவோம்!
previous post