Tuesday, April 16, 2024
Home » மீண்டும் வரலாறு படைப்போம்.. நாட்டைக் காப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

மீண்டும் வரலாறு படைப்போம்.. நாட்டைக் காப்போம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு

by Neethimaan

சென்னை: மீண்டும் வரலாறு படைப்போம்! நாட்டைக் காப்போம் என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். 1967ல் இதே நாளில் தான் திமுக தமிழகத்தில் முதன்முறையாக தேர்தலில் வென்று அண்ணா முதல்வராக பதவியேற்றார். இந்தியத் தேர்தல் வரலாற்றில் ஒரு மாநிலக் கட்சி முதன்முதலாக ஆட்சி அமைத்த நாள் ஆகும். இந்நிலையில் இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின்; இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநிலக் கட்சி தேர்தலில் வென்று ஆட்சியமைத்த நாள்.

பேரறிஞர் அண்ணா தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளம்படை தெற்காசிய ஜனநாயக வரலாற்றில் ஓர் அமைதிப்புரட்சியை நிகழ்த்திக் காட்டிய நாள். அன்று தமிழ்நாட்டைக் காத்தோம்! இன்று மொத்த #INDIA-வின் கூட்டாட்சித்தன்மையையும் பன்முகத்தன்மையையும் மதச்சார்பின்மையையும் காக்க வேண்டிய பெரும் பொறுப்பை நம் தோள்களில் சுமக்கும் அளவுக்கு நம் வலிமை கூடியுள்ளது. மீண்டும் வரலாறு படைப்போம்! நாட்டைக் காப்போம் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

 

 

You may also like

Leave a Comment

eleven + 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi