நீலகிரி: குன்னூர் அருகே அட்டடி பகுதியில் வீட்டுக்குள் பதுங்கியிருந்த சிறுத்தை வெளியேறியது. வீட்டுக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க முடியாமல் 26 மணி நேரத்துக்கும் மேலாக வனத்துறையினர் திணறி வந்தனர். அட்டடி பகுதியில் சுற்றித்திருந்த சிறுத்தை தாக்கியதில் நேற்று 3 தீயணைப்பு வீரர்கள் உள்பட 7 பேர் காயமடைந்தனர்.