சென்னை லியோ படத்துக்கு அதிகாலை 4 மணி சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்க உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. காலை 7 மணி முதல் லியோ திரைப்பட சிறப்பு காட்சிக்கு அனுமதி அளிப்பது குறித்து தமிழ்நாடு அரசே முடிவு செய்யும். ஏற்கனவே சிறப்பு காட்சிக்கு அளிக்கப்பட்ட அனுமதியை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாடு அரசின் முடிவுக்கு விட்டுவிடுவதாக நீதிபதி தெரிவித்திருக்கிறார். அனுமதி அளித்திருக்கக்கூடிய நேரத்தில் 5 காட்சிகளை திரையிடுவது பற்றி அரசுடன் ஆலோசிக்க படத் தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.