அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பகுதியில் உள்ள தியேட்டரில் லியோ திரைப்பட டிக்கெட்டை சிலர் கள்ள மார்க்கெட்டில் 1500 ரூபாய்க்கு விற்பனை செய்தனர். இந்த டிக்கெட்டை வாங்கவும் ரசிகர்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து பிளாக்கில் டிக்கெட் விற்பனை செய்த பாலகிருஷ்ணன், செல்வகுமார் ஆகியோரை கோயம்பேடு போலீசார் கைது செய்து 9 டிக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.