தேவையான பொருட்கள்
இரண்டு எலுமிச்சை பழம்
ஒரு தக்காளி
5 பச்சைமிளகாய்
கால் ஸ்பூன் பெருங்காயத்தூள்
தேவையானஅளவு உப்பு
கால் ஸ்பூன்கடுகு
கால் ஸ்பூன்வெந்தயம்
ஒரு கொத்துகருவேப்பிலை
நாலு காஞ்ச மிளகா
ரெண்டு டம்ளர் தண்ணி
நூறு கிராம் துவரம் பருப்பு
சிட்டிகை மஞ்சத்தூள்
செய்முறை:
துவரம் பருப்பை மஞ்சத்தூள் போட்டு வேக வைத்து எடுத்து வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் இரண்டு கிளாஸ் தண்ணீர் ஊற்றி ஒரு தக்காளியை கட் பண்ணி போடவும். 5பச்சை மிளகாய் போடவும். பெருங்காயத் தூளும் உப்பும் சேர்த்து கலக்காமல் மீது வைக்கவும்.நன்றாக கொதி வந்த பிறகு கலக்கி வேக வைத்த பருப்பை சேர்த்து கொதிக்க விடவும்.தாளிப்பு தவாவில் கடுகு வெந்தயம் கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து கொதித்துக் கொண்டிருக்கும் பருப்பு கலவையில் கொட்டவும்.ஸ்டவ்வை ஆஃப் பண்ணிய பிறகு புரிந்து வைத்து எலுமிச்சை சாறை ஊற்றி 5 நிமிடத்திற்கு மூடி வைக்கவும். பிறகு எடுத்து பரிமாறலாம் சுவையான எலுமிச்சை ரசம் ரெடி.