சென்னை: சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் இருந்து பாஜக எம்.எல்.ஏ.க்கள் வெளிநடப்பு செய்தனர். முதலமைச்சர் கொண்டு வந்த அரசின் தனித் தீர்மானத்தை ஏற்க மறுத்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மசோதாக்கள் மீதான விவாதத்தில் ஆளுநருக்கு எதிரான எம்.எல்.ஏ.க்களின் பேச்சை கண்டித்து பாஜக வெளிநடப்பு செய்தது.