சென்னை: சட்டமன்றத்தை பொதுக்கூட்ட மேடையாக மாற்றிவிடக்கூடாது என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் கொண்டு வந்த அரசினர் தனித் தீர்மானம் மீது பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேசினார். சபாநாயகர் அறிவுறுத்திய பிறகும் ஆளுநர் குறித்து பேசியதை ஏற்க முடியாது. முதல்வரே வேந்தர் என்பது அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. வேந்தர் என்பவர் அரசின் பரிசீலனைக்கு உட்பட்டு தான் நியமிக்கப்படுவார்கள். ..தற்போது அப்படி இல்லை என்பதால் எதிர்க்கிறோம் என்று குறிப்பிட்டார்.
சட்டமன்றத்தை பொதுக்கூட்ட மேடையாக மாற்றிவிடக்கூடாது: பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பேச்சு
176