சென்னை: சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட 10 மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். 10 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட பின் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். இன்று மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும். தீர்மானம் நிறைவேற்றப்படும்போது அவையில் இருக்கக் கூடாது என்பதற்காகவே அதிமுக வெளிநடப்பு செய்துள்ளது என்று அமைச்சர் தெரிவித்தார்.