தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சைக்கிள் பயிற்சி செய்யும்போது கீழே விழுந்து, இடது கையில் காயம் ஏற்பட்டது. கையில் கட்டுப்போட்டு நேற்று பேரவைக்கு வந்தார். இதை பார்த்து எம்எல்ஏக்கள் எப்படி அடி்பட்டது என்று கேட்டனர். அதற்கு அவர் விளக்கமளித்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டசபைக்கு வந்த போது செல்வபெருந்தகையை பார்த்தார். அப்போது கையில் அடிபட்டதை பார்த்து என்ன என்று கேட்டார். உடல் நலனை பார்த்து கொள்ளவும் என்று கூறினார்.